பிரபல தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் ஜப்பான் பூகம்பத்தை கணித்தாரா? 2024-ன் முதல் கணிப்பு உண்மையானதா?

குறிப்பாக மன்னர் சார்லஸ் III பதவி விலகுதல், ஒரு புதிய போப் மற்றும் கடற்படைப் போர் போன்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகளை கணித்துள்ளார்.

Did the famous prophet Nostradamus predict the Japan earthquake? Is the first prediction of 2024 real? Rya

16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தத்துவஞானி, நாஸ்ட்ராடாமஸ் "அழிவின் தீர்க்கதரிசி" என்று அழைக்கப்படுகிறார். இவர் ஹிட்லரின் எழுச்சி மற்றும் கென்னடியின் படுகொலை போன்ற நிகழ்வுகளை துல்லியமாக கணித்துள்ளார். எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் தீர்க்கதரிசனத்திற்கு புகழ்பெற்ற நோஸ்ட்ராடாமஸ் 2024-ம் ஆண்டில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதை கணித்துள்ளார். குறிப்பாக மன்னர் சார்லஸ் III பதவி விலகுதல், ஒரு புதிய போப் மற்றும் கடற்படைப் போர் போன்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகளை கணித்துள்ளார்.

அந்த வகையில் அவரின் ஒரு குறிப்பிட்ட கணிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. "வறண்ட பூமி மேலும் வறண்டு வளரும், அதைக் காணும்போது பெரும் வெள்ளம் ஏற்படும்" மற்றும் "பூச்சிக்கொல்லி அலை மூலம் மிக பெரிய பஞ்சம்" என்ற அவர் கணித்துள்ளார். இந்த நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி ஜப்பானைத் தாக்கிய 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை இது எதிரொலிப்பதாக அவரின் ஆதவராளர்கள் நம்புகின்றனர்.

ஈரான் இரட்டை குண்டுவெடிப்பில் குறைந்தது 100 பேர் பலி!

கடந்த 1-ம் தேதி ஜப்பானில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதில் 32 பேர் இறந்தனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் உணவு பற்றாக்குறை பற்றிய கவலைகள் எழுந்துள்ளது..எனவே நாஸ்ட்ராடாமஸின் பஞ்சம் பற்றிய கணிப்பை இது எதிரொலிப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். 

கடந்த காலங்களில் நாஸ்ராடாமஸ் பல சம்பவங்களை துல்லியமாக கணித்துள்ளார். அந்த வகையில் ராணி எலிசபெத் II 2022 இல் அவரது வயதை துல்லியமாக மதிப்பிட்டு, அவரது மறைவை முன்னறிவித்தார். 

விர்சுவல் ரியாலிட்டி வீடியோ கேமில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 'அவதார்கள்'

2024-ல் உலகம் முழுவதும் என்னென்ன விஷயங்கள் நடக்கும் என்பதையும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். அதன்படி, 2024-ல் சீனா ஒரு மேலாதிக்க சக்தியாக எழுச்சி பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா இந்தியப் பெருங்கடலில் பேரழிவை உருவாக்கும், சீனா கடல் போரை தொடங்கும் என்று அவர் கணித்துள்ளார். தற்போது சீனா - தைவான் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது

இங்கிலாந்தின் அரச குடும்பம், இந்த ஆண்டு கூடுதல் சவால்களை சந்திக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசரின் வழக்கமான குணாதிசயங்கள் இல்லாத ஒரு அரசர் பதவியேற்பார் என்று அவர் கணித்துள்ளார். இது இளவரசர் ஹாரி அல்லது வேறு தெரியாத நபர் அரியணை ஏறுவது பற்றிய ஊகங்களைத் தூண்டியுள்ளது.

2024ல், காலநிலை மாற்றம் மோசமாகிவிடும் என்றும். வெப்ப அலைகள், காட்டுத்தீ மற்றும் வறட்சி போன்ற அதிக தீவிர வானிலை நிகழ்வுகளை அவர் கணித்துள்ளார். வறண்ட பூமி மேலும் வறட்சியாக மாறும் எனவும், திடீர் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார். உலகளாவிய பசி, பட்டினி, பஞ்சம் ஆகியவை அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

நாட்ராடாமஸ் தனது கணிப்பு ஒன்றில், முதுமை காரணமாக, போப்பிற்குப் பதிலாக புதிய இளைய போப் நியமிக்கப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதைய போப், போப் பிரான்சிஸ் முதுமை காரணமாக தற்போது உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கணிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios