Asianet News TamilAsianet News Tamil

விர்சுவல் ரியாலிட்டி வீடியோ கேமில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 'அவதார்கள்'

வீடியோ கேமில் ஒரு சிறுமியை பலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் வந்திருப்பது டிஜிட்டல் உலகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

16-year-old UK girl virtually 'gang-raped' in metaverse game, probe on sgb
Author
First Published Jan 4, 2024, 12:16 AM IST

'விர்ச்சுவல் ரியாலிட்டி' வீடியோ கேமில் உருவாக்கப்பட்ட சிறுமியின் டிஜிட்டல் கதாபாத்திரத்தை வேறு சில பாத்திரங்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனது.

அண்மைக் காலமாக 'விர்சுவல் ரியாலிட்டி' எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் பிரபலமாகி வருகிறது. வீடியோ கேம்ஸ், திரைத்துறை என பல தளங்களில் விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் பயன்படுகிறது. இந்த தொழில்நுட்பம் பயனர்கள் நிஜத்துக்கு நிகராகத் தோன்றும் கற்பனை உலகத்திற்குக் கூட்டிச் செல்லும் சக்தி கொண்டது.

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 'மெட்டாவெர்ஸ்' என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த மெட்டாவெர்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ கேம் ஒன்று, பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கியுள்ளது.

வீடியோ கேமில் ஒரு சிறுமியை பலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் வந்திருப்பது டிஜிட்டல் உலகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த 16 வயது சிறுமி 'மெட்டாவெர்ஸ்' மீது இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

16-year-old UK girl virtually 'gang-raped' in metaverse game, probe on sgb

அந்தச் சிறுமி VR கண்ணாடி மற்றும் ஹெட்செட்டுகள் அணிந்து மெட்டாவெர்ஸ் வீடியோ கேம் ஒன்றை விளையாடியுள்ளார். இந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்கு 'அவதார்' என்ற டிஜிட்டல் கதாபாத்திரம் வழங்கப்படும். விளையாடும்போது சிறுமியின் டிஜிட்டல் கதாபாத்திரத்தை வேறு சில அவதார்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

சிறுமி அளித்த புகாரின் பேரில் அந்நாட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமிக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் உளவியல் பாதிப்பு ஏற்படுள்ளது என்று வழக்கை விசாரிக்கும் போலீசார் கூறுகின்றனர்.

விர்சுவல் ரியாலிட்டி உலகில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

"இது போன்ற செயல்களுக்கு எங்கள் தளத்தில் இடமில்லை. பயனர் பாதுகாப்பிற்காக அறிமுகம் இல்லாத நபர்களின் அவதார்கள் அருகில் நெருங்க முடியாமல் தடுக்கும் வசதிகளும் உள்ளன" என்று மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவையே அசர வைத்த வீடியோ! எப்படிப்பா இப்படியெல்லாம்!!

Follow Us:
Download App:
  • android
  • ios