ஜி20 மாநாட்டின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளைப் புறக்கணித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவருக்காக சிறப்பாக ஒதுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய விடுதியில் தங்குவதை நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Canadian PM Justin Trudeau sparked drama at Delhi hotel by refusing presidential suite offered by India sgb

ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவருக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறப்பாக ஒதுக்கப்பட்டிருந்த ஓட்டல் அறையில் தங்குவதை நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட மாநாட்டுக்கு வந்திருந்த தலைவர்களுக்காக சிறப்பு பாதுகாப்புகளுடன் ஓட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ட்ரூடோ தங்கியிருந்த மத்திய டெல்லியில் உள்ள லலித் என்ற ஓட்டலில் ஸ்னைப்பர் தோட்டாக்கள் துளைக்க முடியாத தடிமனான பாலிகார்பனேட் கண்ணாடி மூலம் மேம்பட்ட பாதுகாப்பு கவசம் அமைக்கப்பட்டிருந்தது. இது தவிர மற்ற பாதுகாப்பு உபகரணங்களும் இருந்தன.

9 பிரிவினைவாத அமைப்புகள்... இஷ்டம் போல உலவும் பயங்கரவாதிகள்... இந்தியாவின் கோரிக்கையை கண்டுகொள்ளாத கனடா!

இருப்பினும், ட்ரூடோவின் பாதுகாப்புக் குழுவினர் அங்கு தங்க வேண்டாம் என்று முடிவு செய்து, அதற்குப் பதிலாக சாதாரண அறைகளை தேர்ந்தெடுத்து தங்கினர். இதனால் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவர்கள் பல முறை கனடா அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது என்றும் அதனால் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

Canadian PM Justin Trudeau sparked drama at Delhi hotel by refusing presidential suite offered by India sgb

இருப்பினும், கனடா அதிகாரிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களில் விருந்தினர் தரப்பில் எடுக்கப்படுவதே இறுதி முடிவாக இருக்கும் என்பதால் ட்ரூடோ ஒரு சாதாரண அறையில் தங்க அனுமதிக்கப்பட்டது. சாதாரண அறையில் தங்கியிருந்தது மட்டுமின்றி, அதற்காக கனடா தரப்பில் பணம் செலுத்தவும் முன்வந்ததாக கூறப்படுகிறது.

கனடாவை விட்டு வெளியேறுங்கள்: இந்துக்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணு மிரட்டல்

ட்ரூடோ தனது பாதுகாப்புக் குழுவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இவ்வாறு நடத்துகொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதட்டமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு குறித்த சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

உச்சிமாநாட்டிற்குப் பிறகு ட்ரூடோ நாடு திரும்பவதும் தாமதம் ஆனது. புறப்படும் நேரத்தில் கனடா அதிபரின் சிறப்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. செப்டம்பர் 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு புறப்பட வேண்டிய விமானம், செவ்வாய்க்கிழமை மதியம் தான் கனடாவுக்குக் கிளம்பியது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய கனடா பிரதமர் 36 மணிநேர தாமதம் காத்திருக்க வேண்டியிருந்தது.

ட்ரூடோவின் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது முதல் முறை அல்ல. 2016, 2019ஆம் ஆண்டுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த முறை, ட்ரூடோ நாடு திரும்ப இந்தியா விமானத்தை வழங்க முன்வந்தது. ஆனால் அதுவும் கனடா தரப்பில் நிராகரிக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் தொழில் தொடங்கப் போறீங்களா? அதிக லாபம் கொடுக்கும் தொழில் வாய்ப்புகள் எத்தனையோ இருக்கு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios