கனடாவை விட்டு வெளியேறுங்கள்: இந்துக்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணு மிரட்டல்
கனடாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவுக்குச் செல்லுங்கள் என்று கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் குர்பத்வந்த் சிங் பண்ணு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார்.
கனடாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவுக்குச் செல்லுங்கள் என்று கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் குர்பத்வந்த் சிங் பண்ணு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார்.
சீக்கியர்களுக்கான நீதி (SFJ) என்ற காலிஸ்தான் சார்பு அமைப்பின் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பண்ணு கனடாவில் வசிக்கும் இந்துக்களை அச்சுறுத்தி, விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியிருக்கிறார்.
SFJ இன் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பண்ணு ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “இந்திய-இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேறுங்கள்; இந்தியாவுக்குப் போய்விடுங்கள். நீங்கள் இந்தியாவை ஆதரிப்பது மட்டுமல்லாமல், காலிஸ்தான் சார்பு சீக்கியர்களின் பேச்சு மற்றும் வெளிப்பாட்டை அடக்குவதையும் ஆதரிக்கிறீர்கள்" என்று பேசியிருக்கிறார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவை தொடர்புபடுத்திப் பேசியதை அடுத்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே இருதரப்பு உறவுவில் உரசல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வந்திருந்தபோது ஜஸ்டின் ட்ரூடோ இதுபற்றி பிரதமரிடம் பேசியிருக்கிறார்.
இந்நிலையில், திங்கட்கிழமை கனடா பிரதமரின் பேச்சைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு இந்தியாவின் தூதரக அதிகாரி ஒருவரை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டது. இதனைக் இந்திய வெளியுறவுத்துறை கண்டித்ததுடன், ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டை நிராகரித்தது. மேலும், பதில் நடவடிக்கையாக கனடாவின் தூதரக அதிகாரி ஒருவரையும் இந்தியாவில் இருந்து 5 நாட்களுக்குள் வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரம் இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்தியாவைக் குற்றம்சாட்டுவது தனது நோக்கம் அல்ல என்றும் இந்தியா இந்த விஷயத்தை இன்னும் நல்ல முறையில் கையாண்டிருக்கலாம் என்றுதான் கூறியதாவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
விஸ்வகர்மா திட்டத்தில் மிகக் குறைந்த வட்டியில் கடன்! யாருக்குக் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?