Asianet News TamilAsianet News Tamil

நாங்க காங்கிரஸ் மாதிரி இல்லை... மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து!!

தமிழ்நாடு சங்க இலக்கியங்களில் தமிழகம் என்று தான் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சங்க இலக்கியங்களில் தமிழகம் என்று தான் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட திரையரங்கம் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் எல்.முருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய சினிமா பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 75வது சுதந்திர அமிர்தப்பெரு விழாவை கொண்டாடும் இந்த சூழலில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்து தமிழ் சினிமா பெருமை சேர்த்தது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம்... நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில், 75 இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவர்களது படைப்புகள் உலக அளவில் கொண்டு செல்லப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து திரைப்படம் எடுக்க வருபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கபட்டுள்ளது. தென்னிந்திய திரைப்படங்கள் இந்தியாவை கடந்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. மொழிகளைக்கடந்து நல்ல கருத்துகொண்ட சினிமா மற்றும் தொழில்நுட்பம் சர்வதேச அளவிற்கே சென்றுவிட்டது. திரைப்படங்கள் எடுக்க அனுமதிபெற சிக்கிள் வின்டோ சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் பிப்.12 அன்று ஆர்பார்ட்டம்... அறிவித்தது ஜாக்டோ ஜியோ அமைப்பு!!

படப்பிடிப்புக்கான அனுமதி எளிமையாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 30 சதவீதம் சலுகையுடன் வெளிநாட்டவர்கள் படம் எடுக்க இந்தியாவில் அனுமதிக்கபடுகிறது. தற்போதைய அரசு கருத்து சுதந்திரத்திற்கு முக்கியதுவம் கொடுக்கிறது. யாருக்கும் எந்த அழுத்தமும் கொடுப்பது கிடையாது. நாங்கள் காங்கிரஸ் ஆட்சி மாதிரி இல்லை. திரைப்படங்களுக்கு மொழிகள் பிரச்சனை இல்லை, பொருள் (content) தான் முக்கியம், இன்றைய திரைப்படங்கள் இந்தியாவை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்கின்றன. தமிழ்நாடு சங்க இலக்கியங்களில் தமிழகம் என்று தான் உள்ளது என்று தெரிவித்தார்.

Video Top Stories