Asianet News TamilAsianet News Tamil

காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பொங்கல் கொண்டாட்டம்... குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடிய காவல்துறை!!

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல்துறையினர் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். 

First Published Jan 15, 2023, 4:43 PM IST | Last Updated Jan 15, 2023, 4:43 PM IST

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல்துறையினர் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவரது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாகரையில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த மாரத்தான் போட்டி!

மேலும் இதில் கோவை மாநகர காவல் துறையினர் தங்களது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். பொங்கல் பொங்கி வரும் பொழுது அனைவரும் பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதைத்தொடர்ந்து அனைவரும் கும்மி அடித்து பொங்கல் பாட்டு பாடி மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடினர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வாழ்க என்று முழக்கமிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் பொங்கல் கொண்டாட்டம்!

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் மாநகர காவல் துறையை சேர்ந்த காவலர்கள் அவர்களது குடும்பத்தினருடன்  கோலமிட்டு தனித்தனியாக பொங்கல் வைத்து படையல் இட்டு சூரிய வழிபாடு மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Video Top Stories