Asianet News TamilAsianet News Tamil

பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்த மக்கள்... வாசலில் வண்ண கோலமிட்டு, புத்தாடை அணிந்து உற்சாக கொண்டாட்டம்!!

தூத்துக்குடியில் மக்கள் பாரம்பரிய முறைப்படி வீட்டு வாசலில் பொங்கல் வைத்து மிக உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். 

தூத்துக்குடியில் மக்கள் பாரம்பரிய முறைப்படி வீட்டு வாசலில் பொங்கல் வைத்து மிக உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் அனைவரும் உலவர்களுக்கும் மற்றும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் பொங்கல் வைத்து மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக மகளிர் அணியின் சமத்துவ பொங்கல்... 100க்கும் மேற்பட்ட மண் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்!!

இந்த நிலையில் தூத்துக்குடியில் மக்கள் பாரம்பரிய முறைப்படி வீட்டு வாசலில் பொங்கல் வைத்து கொண்டாடினர். காமாட்சி அம்மன் கோவில் தெரு, சந்தி விநாயகர் கோவில் தெரு, பொன்னகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகாலை எழுந்து நீராடி இறைவனுக்கு அனைத்து வகையான காய்கறிகளையும் படைத்தனர்.

இதையும் படிங்க: காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பொங்கல் கொண்டாட்டம்... குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடிய காவல்துறை!!

பின்னர். வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன், வீட்டு வாசலில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். அனைவரும் ஒரே நேரத்தில் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து கொண்டாடுவது காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 

Video Top Stories