உதகை அரசு தாவரவியல் பூங்கா.. மிதமான வெப்பத்தில் மனதை மயக்கும் லில்லியம் மலர்கள் - குவியும் சுற்றுலா பயணிகள்!
Ooty Botanical Garden : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் லில்லியம் மலர்கள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகள் பனி பொழிவிலிருந்து பாதுகாக்க கோத்தகிரி காட்டுச் செடிகளை கொண்டு பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டம் ஆகும்.
இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் உலக பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு மலர்க கண்காட்சிக்காக வெளிநாட்டு ரகங்களான லில்லியம், பெட்டூனியா, சால்வியா உள்ளிட்டவை இங்க வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். இந்நிலையில் தற்போது அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் லில்லியம் மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது. இந்த மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதோடு அதன் அருகே நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.