Asianet News TamilAsianet News Tamil

பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில்.. சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின் - வீடியோ இதோ!

Durga Stalin : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். 

இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். மேலும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும் இது விளங்கி வருகிறது. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று வைத்தீஸ்வரன் கோயில் வருகை தந்து தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். 

முன்னதாக அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோயில் ஒவ்வொரு சாமி சன்னதிகளிலும் வழிபாடு செய்தார்.

Video Top Stories