Asianet News TamilAsianet News Tamil

"பிரச்சனைகளை தவிர்க்க புதிய முயற்சி".. ரசிர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய ராகவா லாரன்ஸ் - முழு விவரம்!

Actor Raghava Lawrence : விழுப்புரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ரசிகர்கள் மற்றும் ரசிகர் குடும்பத்தினருடன் போட்டோ எடுத்து கொண்டார்.

First Published Feb 25, 2024, 4:57 PM IST | Last Updated Feb 25, 2024, 4:57 PM IST

பிரபலங்கள் தங்கள் ரசிகர்களைப் பொதுவெளியில் சந்திக்க செல்லும் போது அவர்கள் மீதுள்ள அன்பால் புகைப்படம் எடுக்க நெருங்கிச் செல்வார்கள். அப்போது கூடும் கூட்டத்தால், தள்ளுமுள்ளு, அடிதடி என பல அசம்பாவிதங்கள் ஏற்படுவதுண்டு. அப்படித்தான் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த 'சந்திரமுகி2' பட விழாவில் ஒரு சம்பவம் ஏற்பட்டது.

அதாவது, சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவைக் காண சென்றிருந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பவுன்சர்கள் அந்த மாணவரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

பலரும் இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது எனக் கூறி நடிகர் ராகவா லாரன்ஸூம் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டார். இதுபோல அவரைச் சந்திக்க வந்த ரசிகர் ஒருவர் விபத்தில் மாட்டி இறந்தும் இருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நேரடியாக சென்று ரசிகர்களுடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள     விழுப்புரத்தில் இருந்து தொடங்குகிறேன்' என அவர் கூறியுள்ளார். 

அதன்ப்படி விழுப்புரம், புதுச்சேரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று ரசிகர்களுடன் போட்டோ ஷூட் எடுத்து  கொண்டார். அப்போது "நான் ரசிகர்களுடன் போட்டோஷூட் மட்டுமே எடுத்துகொள்ள வந்துள்ளேன், வேறு ஒன்றுமில்லை" என்றார். பின்னர் அனைத்து ரசிகர்களுடனும், அவர்கள் குடும்பத்தாருடனும் போட்டோ எடுத்து கொண்டார்.  

Video Top Stories