Asianet News TamilAsianet News Tamil

Mark Antony teaser : போன்ல டைம் டிராவலா... புதுசா இருக்கே! வைரலாகும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ பட டீசர் இதோ

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகி யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

Vishal starrer mark antony movie teaser released
Author
First Published Apr 27, 2023, 6:51 PM IST | Last Updated Apr 27, 2023, 6:51 PM IST

ஜிவி பிரகாஷ் நடித்த த்ரிஷா இல்லேனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பிரபுதேவா நடித்த பஹிரா போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்துள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, புஷ்பா வில்லன் சுனில், இயக்குனர் செல்வராகவன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

மார்க் ஆண்டனி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இப்படத்தை வினோத் தயாரித்துள்ளார். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மார்க் ஆண்டனி படத்தின் டீசரை முதன்முதலில் நடிகர் விஜய்க்கு போட்டுக்காட்டிய படக்குழு அவருடன் எடுத்த புகைப்படத்தை இன்று காலை வெளியிட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2 ரிலீசாகும் தியேட்டர்களில் ஐடி ரெய்டு நடத்துனா ரூ.1000 கோடி அள்ளலாம் - பார்த்திபன் நக்கல்

இந்நிலையில், தற்போது மார்க் ஆண்டனி படத்தின் அசத்தலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இப்படம் ஒரு டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பேண்டஸி திரைப்படம் என தெரிகிறது. போன் மூலம் டைம் டிராவலா என்கிற வசனமும் படத்தில் இடம்பெற்று உள்ளது.

ஏற்கனவே மாநாடு படத்தில் டைம் லூப்பில் சிக்கி எஸ்.ஜே. சூர்யா செய்த அட்ராசிட்டியை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தற்போதும் அதேபோன்ற ஒரு கதைகளத்தில் உருவாகி உள்ள மார்க் ஆண்டனி படத்தில் அவர் நடித்துள்ளதால் இப்படமும் எஸ்.ஜே.சூர்யாவின் கெரியரில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... முன்பதிவின் மூலம் மட்டும் இத்தனை கோடி வசூலா! ரிலீசுக்கு முன்பே கலெக்‌ஷனில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் 2

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios