MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பொன்னியின் செல்வன் 2 ரிலீசாகும் தியேட்டர்களில் ஐடி ரெய்டு நடத்துனா ரூ.1000 கோடி அள்ளலாம் - பார்த்திபன் நக்கல்

பொன்னியின் செல்வன் 2 ரிலீசாகும் தியேட்டர்களில் ஐடி ரெய்டு நடத்துனா ரூ.1000 கோடி அள்ளலாம் - பார்த்திபன் நக்கல்

சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பார்த்திபன் ஐடி ரெய்டு பற்றி பேசி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 27 2023, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் புரமோஷனுக்காக கடந்த 10 நாட்களாக இந்தியா முழுவதும் சுற்றிவந்த படக்குழு, இன்று சென்னையில் நடைபெற்ற பிரஸ்மீட் மூலம் அதனை முடித்துள்ளது. இன்று சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரஸ்மீட்டில் படத்தில் நடித்த ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டு பேசினர். குறிப்பாக பார்த்திபன் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

24

அவர் பேசியதாவது : “மணிரத்னத்தின் அசிஸ்டண்ட் வந்து பொன்னியின் செல்வன் 1 படத்தின் புரமோஷனின் போது நீங்கள் பேசியது செம்ம வைரலா போச்சு. அந்த மாதிரி ஒரு பிட்ட இப்ப எடுத்து விடுங்கனு சொன்னாங்க. அவர் வைரலா வேணும்னு சொன்னதும் எனக்கு தோன்றியது ஐடி ரெய்டு தான். ஸ்கொயரா சொல்லல, ரவுண்டாவே சொல்றேன். நாளைல இருந்து ஒரு ஆயிரம் கோடி ரூபாய் எங்கையாவது ரெய்டு பண்ணனும்னு தோணுச்சுனா, பொன்னியின் செல்வன் 2 திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போங்க.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி 4-ல் திடீரென வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்த 2 பிரபலங்கள் - இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு!

34

கண்டிப்பாக இந்த வாரத்தில் ரூ.1000 கோடி வசூலை அள்ளும் ஒரு படமாக பொன்னியின் செல்வன் இருக்கும். மணி சார் இந்த படத்துக்காக எவ்வளவு உழைப்பை கொட்டி இருக்கிறார் என்பதைவிட, இந்த படத்தின் புரமோஷனுக்காக நிறைய வார்த்தைகளை கொட்டி இருக்கார். அவர் இவ்வளவு பேசி யாருமே பார்த்திருக்க மாட்டாங்க. ஏன் சுஹாசினியே பார்த்திருக்க மாட்டாங்க. 

44

சில பேர் ஸ்டைல் பண்ணா மயிரு மாதிரி இருக்கும். ஆனா விக்ரம் மயிர வச்சிட்டே இவ்ளோ ஸ்டைல் பண்றாரு. வெறும் ஒரு குடுமிய வச்சிகிட்டு இப்படியெல்லாம் பண்றாரு. மயிருங்கிறது தூய தமிழ், இதை நாம தான் கெட்ட வார்த்தை என சொல்லிக்கொள்கிறோம். தங்களால் முடிஞ்ச ஒரு ஸ்டைல தங்கலான் மூலமா செஞ்சிருக்கீங்க உங்களுக்கு வாழ்த்துக்கள்” என தனக்கே உரித்தான நக்கல் நையாண்டிகளுடன் பார்த்திபன் பேசிய பேச்சு தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங்காக உள்ளது.

இதையும் படியுங்கள்... லவ் யூ பட்டு... வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணத்தால் மனமுடைந்து போன குஷ்பு - கலங்கவைக்கும் டுவிட்டர் பதிவு இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே மேடையில் ஐஸ்வர்யா ராய் - நீட்டா அம்பானி ஆட்டம்.! சல்மான் கான் பாட்டிற்கு செம டான்ஸ்!
Recommended image2
பார்த்திபன் இப்படி சொல்லிட்டாரே... முட்டாள்தனமான பேச்சு என திரிஷா பதிலடி
Recommended image3
மனோஜின் முட்டாள்தனமான பிளான்... சல்லி சல்லியாய் உடைக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved