MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ilaiyaraaja : நீச்சல் குளத்தில் மெலடி பாடலா? இளையராஜாவின் பிடிவாதத்தால் மணிரத்னம் படத்தில் உருவான அடிபொலி ஹிட் சாங்!

Ilaiyaraaja : நீச்சல் குளத்தில் மெலடி பாடலா? இளையராஜாவின் பிடிவாதத்தால் மணிரத்னம் படத்தில் உருவான அடிபொலி ஹிட் சாங்!

Ilaiyaraaja Song Secret : இசைஞானி இளையராஜா என்றாலே புதுமை தான். அப்படி மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் படத்திற்காக அவர் போட்ட ஒரு அருமையான மெலடி பாடல் பற்றி இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 08 2026, 09:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ilaiyaraaja Song Secret
Image Credit : X

Ilaiyaraaja Song Secret

தமிழ் சினிமாவில் நீச்சல் குளக் காட்சிகள் என்றாலே பொதுவாக கிளாமர் தூக்கலாகவும், வேகமான இசையுடன் கூடிய பாடல்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக நீச்சல் குளத்தையே பின்னணியாகக் கொண்டு ஒரு மென்மையான மெலடி பாடலை உருவாக்கி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கச் செய்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. மணிரத்னம் இயக்கத்தில் 1988-ம் ஆண்டு வெளியான ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம் கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Music: வார்த்தைகளை சூப்பர் ஹிட்டாக்கிய இளையராஜா.! ராஜா - வைரமுத்து கூட்டணியின் சொக்க வைக்கும் Top பாடல்கள் லிஸ்ட்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அக்னி நட்சத்திரம் பட பாடல் உருவான விதம்
Image Credit : facebook

அக்னி நட்சத்திரம் பட பாடல் உருவான விதம்

விஜயகுமார், அமலா, நிரோஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களுக்கும் கவிஞர் வாலி வரிகள் எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஒரு பூங்காவனம்’ பாடல் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படும் மெலடிகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக கார்த்திக் மற்றும் நிரோஷா இடையேயான காட்சிகளுடன் இடம்பெறும் இந்த பாடல், அதன் காட்சியமைப்பு மற்றும் மென்மையான இசைக்காக தனித்துவமாக பார்க்கப்படுகிறது.

Ilaiyaraaja : ஒரே பாட்டில் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய இளையராஜா... தேசிய விருது வென்ற அந்த பாடல் பற்றி தெரியுமா?

Related Articles

Related image1
இளையராஜா போட்ட டியூன்.. கமல் ஆடிய டான்ஸ்! 'புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா' இன்றும் ஹிட் ஏன்?
Related image2
Music: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே.! இளையராஜா இசைத்த மெலடி.! மெய் மறந்து கேட்டு கண்ணீர் வடித்த பாலச்சந்தர்.!
34
ட்ரெண்டை மாற்றிய இளையராஜா
Image Credit : Instagram

ட்ரெண்டை மாற்றிய இளையராஜா

இந்த பாடல் உருவான விதத்திலும் சுவாரஸ்யமான பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் நீச்சல் குளத்தை மையமாகக் கொண்ட பாடல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்தபோது, வழக்கமான கமர்ஷியல் பாணியில் பாடலை அமைக்காமல் வித்தியாசமாக முயற்சிக்க வேண்டும் என்று இளையராஜா முடிவு செய்ததாக கூறப்படுகிறது. “நீச்சல் குளத்தில் பாடல் என்றாலே அது வேகமான அல்லது கவர்ச்சியான பாடலாகத்தான் இருக்க வேண்டுமா?” என்ற எண்ணத்தில் இருந்து மாறுபட்டு, அந்த காட்சிக்கு மெதுவான மெலடியை உருவாக்க வேண்டும் என அவர் தீர்மானித்ததாக சொல்லப்படுகிறது.

Ilaiyaraaja : மேஸ்ட்ரோ மேஜிக்... சவாலான ராகங்களிலும் புகுந்து விளையாடி இளையராஜா கொடுத்த அடிபொலி ஹிட் பாடல்கள் பற்றி தெரியுமா?

44
வைரல் ஹிட் ஆன பாடல்
Image Credit : our own

வைரல் ஹிட் ஆன பாடல்

அதன்படி உருவான டியூன் இயக்குநருக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தபோதிலும், பாடல் பின்னர் படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வாலியின் அழகான வரிகளும், இளையராஜாவின் இனிமையான இசையும் இணைந்த ‘ஒரு பூங்காவனம்’ பாடல் காலம் கடந்தும் ரசிகர்களின் பிளேலிஸ்டில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. பின்னாளில் ‘காஞ்சனா’ திரைப்படத்திலும் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டு, நடிகை கோவை சரளா நடித்த காட்சிகள் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. நீச்சல் குளம் + மெதுவான மெலடி என்ற வித்தியாசமான காம்பினேஷனை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இந்த பாடல், இளையராஜாவின் இசை சிந்தனை எவ்வளவு தனித்துவமானது என்பதற்கும் ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.

Ilayaraja: இசை உலகின் பொற்கால கூட்டணி! இளையராஜா – எஸ்.பி.பி இணைந்து படைத்த சாதனைகள் தெரியுமா?!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இளையராஜா
Latest Videos
Recommended Stories
Recommended image1
DC புயலில் சிக்கி வசூலில் வாஷ் அவுட் ஆன GDN! படம் சூப்பர்... ஆனா வசூல் இவ்வளவு சுமாரா?
Recommended image2
DC Movie Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய லோகேஷ்... முதல் நாளே இத்தனை கோடி வசூல் அள்ளியதா டிசி?
Recommended image3
Vishwanath And Sons படத்தின் கதை இதுதானா? சூர்யா பட டிரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?
Related Stories
Recommended image1
இளையராஜா போட்ட டியூன்.. கமல் ஆடிய டான்ஸ்! 'புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா' இன்றும் ஹிட் ஏன்?
Recommended image2
Music: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே.! இளையராஜா இசைத்த மெலடி.! மெய் மறந்து கேட்டு கண்ணீர் வடித்த பாலச்சந்தர்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved