எஸ்.ஜே.சூர்யா - ராகவா லாரன்ஸ் சேர்ந்து தெறிக்கவிடும்... 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டீசர் வெளியானது!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் தயாரியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஸ்டோன்பெஞ்ச் பிலிம்சின், கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல சுவாரசியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில், இந்த படத்தின் டீஸரிலேயே சில சுவாரஸ்யமான காட்சிகளையும் அதற்காக தேர்வு செய்யப்பட்ட லோகேஷனையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக இப்படத்திற்காக, கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு மிக முக்கியமான காட்சிகள் சில அங்கு பதிவு செய்யப்பட்டன.
மேலும் இந்த படத்தில், நடிகரும் - இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல் பாகத்தில் சித்தார்த் ஏற்று நடித்த இயக்குனர் கதாபாத்திரத்திலும், பாபி சிம்ஹா நடித்திருந்த வேடத்தில் தற்போது ராகவா லாரன்சும் நடித்துள்ளனர். குறிப்பாக ராகவா லாரன்ஸ் கொஞ்சம் முரட்டுத்தனமாக, மூக்கில் வலையமெல்லாம் மாட்டிக்கொண்டு, மிரட்டியுள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
அந்தரங்க விஷயத்தில் கணவருடன் இப்படி இருக்கவே எனக்கு பிடிக்கும்? கூச்சமின்றி கூறிய ஐஸ்வர்யா ராய்..!
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 'ஜிகர்தண்டா'வை எடிட்டிங் செய்து தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷனின் உதவியாளரான ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பை கையாளுகிறார். விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான அதிரடி நகைச்சுவை கலந்த மாபெரும் வெற்றிப் படமான 'ஜிகர்தண்டா'வைப் போலவே இந்தப் படமும் ஆக்ஷன் கேங்ஸ்டர் கதையமைப்பில் உருவாகிறது. பல திருப்பங்கள் நிறைந்த ஜிகர்தண்டாவை போல் இப்படமும் இன்னும் விறுவிறுப்புடன் கூடிய ஒரு டிரெண்ட் செட்டர் படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.