ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவையானி நடிப்பில் உருவாகி இருக்கும் 3BHK திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

3BHK Movie Trailer : 8 தோட்டாக்கள் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கணேஷ். இதையடுத்து அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தை இயக்கிய அவர், தற்போது 3BHK என்கிற திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்க தயாராகி வருகிறார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரித்து உள்ளார். இவர் முன்னதாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை தயாரித்திருந்தார். 3BHK திரைப்படத்தில் சித்தார்த் மற்றும் சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். சரத்குமாரின் மகனாக சித்தார்த் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் மற்றுமொரு ஹைலைட்டான விஷயமாக தேவையானி - சரத்குமார் ஜோடி பார்க்கப்படுகிறது. சூர்யவம்சம் படத்திற்கு பின்னர் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த படம் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்திற்கு அம்ரித் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூலை 4ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

3BHK படத்தின் டிரெய்லர்

3BHK படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் டிரெய்லரை இன்று படக்குழு வெளியிட்டு உள்ளது. சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டிலேயே கஷ்டப்படும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை பற்றிய கதை தான் இது. அவர்களின் சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற கனவும், அதை நனவாக்க அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மிகவும் யதார்த்தமாக சொல்லி உள்ள படம் தான் இந்த 3BHK. இப்படத்தில் சரத்குமார் - தேவையானி மற்றும் அவரது மகனாக நடித்துள்ள சித்தார்த், மகளாக நடித்துள்ள மீதா ஆகியோர் மிடில் கிளாஸ் குடும்பமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது டிரெய்லர் பார்க்கும் போதே தெரிகிறது.

நம்ம கிட்ட பணம் இருக்கா... இல்லையானு நம்ம அக்கவுண்ட பாக்க வேணாம்; நம்ம பாடி லேங்குவேஜ பார்த்தே எடை போடுவார்கள் என்பன போன்ற உணர்வுப்பூர்வமான டயலாக்குகளும் இந்த டிரெய்லரில் நிறைந்து இருக்கின்றன. இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தொகுப்பாளராக கணேஷ் சிவா பணியாற்றி உள்ளார். தமிழ் சினிமாவில் அடுத்த ஃபீல் குட் படமாக 3BHK இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஜூலை 4ந் தேதி திரைக்கு வர உள்ளது.

3BHK (Tamil) - Official Trailer | Siddharth | Sarath Kumar | Sri Ganesh | Amrit Ramnath | Arun Viswa