விஜய் சேதுபதி விலகிய முரளிதரன் பயோபிக்... அனல்பறக்கும் வசனங்களுடன் கூடிய ‘800’ பட டிரைலரை வெளியிட்ட சச்சின்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 800 படத்தின் டிரைலரை சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.

Sachin released muttiah muralitharan biopic 800 movie trailer gan

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜாம்பவான் பவுலராக இருந்தவர் முத்தையா முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஒரே ஒரு கிரிக்கெட் வீரரும் இவர் தான். இப்படி சாதனை நாயகனாக வலம் வந்த முரளிதரன் தன் வாழ்க்கையில் ஏராளமான சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். பலரும் அறிந்திடாத அவரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை மையமாக வைத்து 800 என்கிற திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர்.

இப்படத்தில் முத்தையா முரளிதரனாக முதலில் நடிக்க கமிட் ஆனது விஜய் சேதுபதி தான். இதற்காக லுக் டெஸ்ட் எல்லாம் எடுத்து ஷூட்டிங் தொடங்க இருந்த நேரத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து பாலிவுட் நடிகர் மாதூர் மிட்டல் என்பவரை ஹீரோவாக நடிக்க வைத்து அப்படத்தை எடுத்து முடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஹாலிவுட் ஹீரோயின்ஸ் தோத்துடுவாங்க..! 38 வயதில் கவர்ச்சி களோபரம் பண்ணும் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா!

எம்.எஸ்.ஸ்ரீபதி என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் நாசர், வேலராமமூர்த்தி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. மும்பையில் நடைபெற்ற விழாவில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஜெயசூர்யா ஆகியோர் இணைந்து இப்படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.

அதில், ‘இன்னைக்கு நாடே அண்ணாந்து பார்க்குற அளவுக்கு தோட்டக்காட்டான் வளர்ந்திருக்கிறான்’ என நாசர் பேசும் வசனமும், தமிழன் அவ்வளவு லேசா டீம்ல சேர இயலாதுனு எல்லாரும் சொல்லிக்கிறாங்க” என வேல ராமமூர்த்தி பேசும் வசனமாகட்டும் அனைத்தும் கிரிக்கெட்டில் உள்ள அரசியலை தோலுரிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  ஜவான் படத்திற்கு அட்லி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியாம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios