தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.பிரம்மாண்டம், வசூல், விமர்சனம் என அனைத்துமே ஒட்டுமொத்த திரையுலகமும் டோலிவுட்டை பெருமையுடன் திரும்பி பார்க்கும் அளவிற்கு அமைந்தது. 

அதன் பின்னர் பிரபாஸ் 300 கோடி, 500 கோடி பட்ஜெட் படங்கள், பாலிவுட் ஹீரோயின்களுடன் டூயட் என செம்ம மாஸாக வலம் வருகிறார். ஒற்றை படத்திலேயே உலக சாதனை படைத்ததால் பிரபாஸ் கைவசம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்கள் குவிகின்றன. ஏற்கனவே பிரபாஸின் 21வது படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார். இந்த படத்தில் பிரபாஸுடன் சேர்ந்து தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் சம்பளத்தையே மிஞ்சும் அளவிற்கு பிரபாஸுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்தது.  

அதையடுத்து பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்க உள்ள ஆதிபுருஷ் என்ற படத்தில் நடிக்க உள்ளார். சும்மா இல்லீங்க... இந்த படத்தோட பட்ஜெட் மட்டுமே 500 கோடி என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இதுவரை இந்திய மொழிகளில் வெளிவந்த அனைத்து ஸ்பெஷல் எபெக்ட்ஸ் படங்களையும் அடித்து ஓரங்கட்டும் அளவிற்கு விஎஃப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற உள்ளதாம். அதுக்காக மட்டுமே ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாம் படக்குழு. 

 

இதையும் படிங்க:  “பீட்டர் பாலை அன்னைக்கே செருப்பால அடிச்சு விரட்டியிருப்பேன்”... கொந்தளித்த வனிதா...!

இதற்கு எல்லாம் முன்னதாக ஐரோப்பாவில் நடக்கும் முந்தைய கால கதையை மையமாக வைத்து உருவாகி வரும் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்துவருகிறார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். வரும் 23ம் தேதி பிரபாஸ் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அதை முன்னிட்டு ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு அட்வான்ஸாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.