பி.மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா, நவீன் பாலிஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்துக்கு இவருக்கு உடல் எடை அதிகரித்ததன் காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். அதன்பின் இவர் நடித்த சைலன்ஸ் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்ததால், சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார் அனுஷ்கா. இதனால் அவர் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது.

அதன்பின்னர் அந்த திருமண வதந்தியை தவிடுபொடியாக்க நடிகை அனுஷ்கா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்கிற படத்தில் நடிப்பதாக அறிவித்தார். இப்படத்தில் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார் அனுஷ்கா. தன்னைவிட வயதில் சிறியவரை காதலிக்கும் படியான சர்ச்சைக்குரிய வேடத்தில் தான் நடித்திருக்கிறார் அனுஷ்கா.

இதையும் படியுங்கள்... கல்கியே கன்பியூஸ் ஆகும் அளவுக்கு.. பொன்னியின் செல்வனில் இத்தனை மாற்றங்கள் செய்துள்ளாரா மணிரத்னம்? முழு விவரம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படத்தை பி.மகேஷ்பாபு என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தை யுவி கிரியேசன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராதன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அனுஷ்கா நடிப்பில் பல ஆண்டுகளுக்கு பின் உருவாகி உள்ள படம் இது என்பதால் இந்த டீசருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் அனுஷ்காவின் அம்மா கேரக்டர், இந்த ஜென்மத்துல அவ கல்யாணம் பண்ணிக்க போவதில்லை என டயலாக் சொல்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் தற்போது 40 வயதாகியுள்ள நடிகை அனுஷ்கா, இனி திருமணம் செய்யப்போவதில்லை என்பதை இதன் மூலம் சூசகமாக அறிவித்துள்ளாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Miss Shetty Mr Polishetty (Tamil) Teaser | Anushka Shetty | Naveen Polishetty | Mahesh Babu P

இதையும் படியுங்கள்... குழந்தைக்கு இப்படி ஒரு பெயரா? குழந்தை பிறந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்த பூஜா - ஜான் கொக்கேன் ஜோடி!