குழந்தைக்கு இப்படி ஒரு பெயரா? குழந்தை பிறந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்த பூஜா - ஜான் கொக்கேன் ஜோடி!
நடிகை பூஜா ராமசந்திரன் கர்ப்பமாக இருந்த நிலையில், இவருக்கு குழந்தை பிறந்த தகவலை தற்போது இந்த தம்பதி புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.
சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, பின்னர் வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகையாக சில படங்களில் நடித்து பிரபலமானவர் பூஜா ராமச்சந்திரன்.
மாடலாவும் இருந்து வந்த பூஜா, தன்னுடன் பணியாற்றிய VJ Craig என்பவரை கடந்த 2010- ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சின்னத்திரையில் அவ்வப்போது தலை காட்டி வந்த பூஜா, திடீர் என கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வந்த பூஜா, மலையாள நடிகரும்... ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான, ஜான் கொக்கேன் என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார்.
இதை தொடர்ந்து இவர்கள் இருவரும், கடந்த 2019 ஆம் ஆண்டு மிகவும் எளிமையான முறையில், திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர், இருவரும் ஒன்றாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவையே ஸ்தம்பிக்க வைத்து வந்த நிலையில், திடீர் என கடந்த ஆண்டு கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் பூஜா.
சமீபத்தில் தான் பூஜாவுக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார் ஜான் கோகென். இவர் ஆர்யா நடித்த சார்பட்டா, மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை தற்போது அறிவித்துள்ளனர். குழந்தைக்கு கியான் கொக்கேன் என வித்தியாசமாக பெயர் வைத்துள்ளதை அறிவித்து, குழந்தையின் கையை பிடித்தபடி இருக்கும் கியூட் புகைப்படம் ஒன்றை இவர்கள் வெளியிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.