பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பிளேஸ்பாளையம் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்நிலையில் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி இடைவேளை நேரத்தில் கழிவறைக்கு சென்றுள்ளார். இதையறிந்த பள்ளியின் தலைமையாசிரியர் பாஸ்கர், பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனே அந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். உடனே தலைமையாசிரியர் அங்கிருந்து தப்பித்து சென்றார். 

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் தலைமையாசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள தலைமையாசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.