காவல் நிலையங்களில் பதிவேடு புத்தகம் இல்லாமல் போலீசார் அவதி… கண்டு கொள்ளாத உயர் அதிகாரிகள்!

காவல் நிலையத்தில், பதிவேடு, நோட்டு - புத்தகம் இல்லாமல் போலீசார் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும்,எ வ்வித நடவடிக்கையும் எடுக்ககாமலும், கண்டும் காணாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Police Station without Police Book

காவல் நிலையத்தில், பதிவேடு, நோட்டு - புத்தகம் இல்லாமல் போலீசார் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும்,எ வ்வித நடவடிக்கையும் எடுக்ககாமலும், கண்டும் காணாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 29 காவல் நிலையங்கள், 4 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு, 78 வகையான பதிவேடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகளில் தினம், வாரம், மாதம் ஒரு முறை, 6 மாதத்திற்கு ஒருமுறை பயன்படுத்துபவை என பிரிக்கப்பட்டுள்ளது.Police Station without Police Book

முதல் தகவல் அறிக்கை, அரெஸ்ட் கார்டு, ஜாமீன் புத்தகம், மனு ரசீது புத்தகம், கேஸ் டைரி, மோட்டார் பெட்டி கேஸ் புத்தகம், சாதாரண பெட்டி கேஸ் புத்தகம், ரவுடி ரிஜிஸ்டர் உட்பட சில ஆவணங்கள் முக்கியமானவை. இந்த ரிஜிஸ்டர்கள் காவல் நிலையங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படும். ஆனால் ரிஜிஸ்டர்கள் மற்றும் ஆவணங்கள் சமீப காலங்களில் சப்ளை செய்யப்படுவதில்லை.

பெரும்பாலான காவல் நிலையங்களில் சொந்தமாக தயார் செய்து கொள்கின்றனர். புத்தாண்டு துவங்க இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாண்டில் புதிய ரிஜிஸ்டர்கள் பயன்படுத்த வேண்டும். இதுவரை தேவையான ரிஜிஸ்டர்கள் வழங்கப்படவில்லை. வெளியே பிரின்டிங் பிரஸ்களில் அச்சடித்தால் பல ஆயிரங்கள் செலவாகும் என்பதால் இன்ஸ்பெக்டர்களும் புலம்பி வருகின்றனர். Police Station without Police Book

இதுகுறித்து காவல் நிலையங்களில் விசாரித்தபோது, 'ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தேவையான ஆவணங்கள் வழங்குவார்கள். இந்த ஆண்டு இதுவரை வழங்கவில்லை. வெளியில் பிரின்டிங் செய்தால் ஆயிரக்கணக்கில் பணம் செலவாகும். என்ன செய்வதென்றே தெரியவில்லை என புலம்புகிறார்கள். புத்தாண்டுக்குள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் முக்கிய ஆவணங்களை வழங்க மாவட்ட எஸ்பி பொன்னி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios