திருப்பதி அருகே தமிழகத்தை சேர்ந்த காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில் முன் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகள் மோனிஷா- ஹேமந்த் குமார் என்பதும் தெரிவந்துள்ளது. 

இருவரின் தலை மற்றும் உடல்கள் சிதறி கிடந்தன. தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். 

பின்னர் அவர்களின் பையை சோதனை செய்த போது, அவர்களின் பையில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அந்த பெண்ணின் ஹால் டிக்கெட் இருந்துள்ளது. அதில் அவர் ஆற்காட்டில் உள்ள மகாலட்சுமி பெண்கள் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருவது தெரிவந்தது. அதேபோல் ஹேமந்த் குமார் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது யாராவது இவர்களை கொன்றுவிட்டு தற்கொலை போல் சித்தரித்துள்ளனரா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.