திருவள்ளூர்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு திருவள்ளூரில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு கலெக்டர் அலுவலத்திற்கு சென்று அங்கேயும் முழக்கங்களை எழுப்பி தெறிக்கவிட்டனர்.

tiruvallur name க்கான பட முடிவு

திருவள்ளூர் மாவட்டம், எம்.ஜி.ஆர். சிலை அருகே தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் மருத்துவர் பிரபு ஷங்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரமா, ஒருங்கிணைப்பாளர்கள் இராஜ்குமார், நந்தகுமார், வெங்கடேஷ், ஜோசப்பின் ஆகியோர் பங்கேற்றனர். 

doctors protest in tiruvallur க்கான பட முடிவு

இந்த ஆர்ப்பாட்டத்தில், "மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பணப்பலன்களை அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும்" என்ற ஒற்றைக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.

மேலும், 100-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய படம்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அங்கேயும் முழக்கங்களை எழுப்பி தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். பின்னர், கோரிக்கைத் தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.