Zee Tamil Vinayagar Chaturthi Special Shows : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜீ தொலைக்காட்சியில் சிறப்பு பட்டிமன்றம் முதல் சூப்பர் ஹிட் படம் வரையில் என்னென்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று பார்க்கலாம்.

Zee Tamil Vinayagar Chaturthi Special Shows : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி புதன் கிழமை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்னென்ன ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாக பண்டிகை என்றாலே மக்களுக்கு விருந்து தான். காலை முதல் இரவு வரையில் ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். அதில் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன என்று புதிய திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்படும். அப்படி ஜீ தமிழில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று பார்க்கலாம்.

காலை 8 முதல் 9:30 மணி வரை

கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் " மாற வேண்டியவர்கள் பிள்ளைகளா? பெற்றோர்களா? என்ற தலைப்பில் எழிலரசி, வழக்கறிஞர் அருண், பேராசிரியர் பழனி, செந்தமிழ் செல்வி திருமதி சாந்தாமணி, நீலகண்டன், சொல்லரசி பர்வீன் சுல்தானா ஆகியோர் பங்கு பெறும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.

காலை 9.39 மணி

சாய் தாரம் தேஜ், சம்யுக்தா மேனன், சுனில் என பல திரையுலக பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற விருபாக்ஷா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

பிற்பகல் 12 மணி

த்ரிஷா, சந்தோஷ் பிரதாப் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தி ரோடு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. சாலை விபத்தில் சிக்கிய த்ரிஷா தனது கணவனையும் குழந்தையையும் இழக்க இந்த விபத்தில் மறைந்து இருக்கும் மர்மத்தை கண்டு பிடிக்க போராடுவது தான் இந்த படத்தின் கதை.

பிற்பகல் 3 மணி:

Zee தமிழின் சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளர்கள் மற்றும் உங்களின் பேவரைட் Zee பிரபலங்கள் ஒன்றிணைந்து ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என தூள் கிளப்பும் விநாயகர் சதுர்த்தி மெகா சங்கமம் ஒளிபரப்பாக உள்ளது.

மாலை 5 மணி

சந்தானத்தின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஹாரர் காமெடி திரைப்படமான DD நெஸ்ட் லெவல் படம் ஒளிபரப்பாக உள்ளது. இதன் மூலமாக விநாயகர் சதிர்த்தி தினத்தை முன்னிட்டு காலை முதல் மாலை வரை ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்.