Anna Serial Today Episode : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

அண்ணா சீரியல் இன்றைய எபிசோடு

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் சண்முகம் குடும்பத்தை அழிக்க சௌந்தரபாண்டி வேனில் பாம் வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சண்முகம் குடும்பத்தினர் பாண்டியம்மாவையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்ல சௌந்தரபாண்டி பதற்றத்துடன் பின் தொடர்ந்து வருகிறார். சண்முகம் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து இறங்கியதும் அறிவழகன், ரத்னா மற்றும் சிவபாலன், வீரா ஆகியோருக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்கின்றனர்.

பிக் பாஸ் டைட்டில் வின்னராகும் வாய்ப்பு யார் யாருக்கு இருக்கு தெரியுமா?

சௌந்தரபாண்டி பாண்டியம்மாவை கூப்பிட பாண்டியம்மா நல்ல வேலை பாம் வெடிக்கல என நிம்மதி அடைகிறாள். பாம்ப வைப்பவர்கள் சௌந்திரபாண்டிக்கு போன் செய்து பாம் எடுத்து விட்டதாக சொல்கின்றனர். பரணி வீராவை பாக்கியம் வீட்டிற்கு வாழ அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்ல சண்முகம் அவளுக்கு விருப்பம் இருந்தால் போய் வாழட்டும் என வாக்குவாதம் செய்கிறான். மறுபக்கம் சௌந்தரபாண்டி, பாண்டியம்மா ஆகியோர் காதல் சென்று கொண்டிருக்க ரவுடிகள் போன் செய்ய சௌந்தரபாண்டி என்ன விஷயம் என்று கேட்கிறார்.

பாமை உங்க கார் டிக்கில தான் வச்சிருக்கோம் என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைந்து டிக்கியை திறக்க பாம் வெடித்து சிதறுகிறது. பிறகு இருவரும் கரிக்கட்டையாக வீட்டுக்கு வர எல்லோரும் என்னாச்சு என்று கேட்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சண்டை போட்டு வீட்டை விட்டு வந்த செந்தில் – ஒரு வழியாக புதிய வீட்டுல பால் காய்ச்சிய மீனா: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2