Sangeetha Sajith: ஏ.ஆர். ரஹ்மானின் ஃபேவரைட் பாடகி சங்கீதா சஜித் திடீர் மரணம்...சோகத்தில் திரையுலகினர்..

Sangeetha Sajith: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடிய பிரபல பாடகி சங்கீதா சஜித் இன்று காலமானார். 

Playback singer Sangeetha Sajith passes away at 46

கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித். அவருக்கு வயது 46. தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ’தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ உட்பட பல்வேறு ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.  

கர்நாடக இசைக் கலைஞராகவும் அறியப்பட்ட சங்கீதா சஜித், முன்னணி இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சங்கீதா சஜித் தமிழில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான மிஸ்டர் ரோமியோ படத்தில் இடம்பெற்ற 'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை.. தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை' என்கிற சூப்பர் ஹிட் பாடலை பாடியுள்ளார்.

Playback singer Sangeetha Sajith passes away at 46

அதுமட்டுமின்று, தமிழில் மிஸ்டர் ரோமியோ, தலைநகரம் என வெகு சில படங்களிலேயே பாடியுள்ள சங்கீதா சஜித் இதுவரை, 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய கடைசி பாடல், பிருத்விராஜின் குருதி படத்தின் தீம் சாங் ஆகும்.

இதையடுத்து, கடந்த சில மாதங்களாக சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சங்கீதா சஜித் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவு தென்னிந்திய திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

இதையடுத்து, அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது. சங்கீதாவின் திடீர் மறைவால் தென்னிந்திய திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இசைக்கலைஞர்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க ....Venba: என்னது..வெண்பாவுக்கு கல்யாணமா..? மாப்பிள்ளை யாருனு சொல்லுங்க ப்ளீஸ்? கேள்வி எழுப்பிய நெட்டிசன்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios