Venba: என்னது..வெண்பாவுக்கு கல்யாணமா..? மாப்பிள்ளை யாருனு சொல்லுங்க ப்ளீஸ்? கேள்வி எழுப்பிய நெட்டிசன்..
Bharathi Kannamma Venba: பாரதி கண்ணம்மா நடிகை வில்லி வெண்பா மணக்கோலத்தில் பதிவிட்டுள்ள சமீபத்திய போஸ்ட் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் டி.வி. டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் டாப்பில் உள்ளது. அதில் வில்லியாக வரும் வெண்பா கதாபாத்திரத்திற்கு, மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் ரீச் கிடைத்துள்ளது.
வில்லி வெண்பா நிஜத்தில் தான் கண்ணம்மாவை பாடாய் படுத்துவதாக நினைத்து நெட்டிசன்கள் திட்டித் தீர்க்கிறார்கள். மீம்ஸ் கிரியேட்டர்களால் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தெறிக்க விடுகிறார்கள். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பரீனா, மணக்கோலத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு பாரதி கண்ணம்மாவில் வரும் காட்சிக்காக, அது என்னவென்று கண்டுபிடியுங்கள் என்று கேட்டுள்ளார்.
இதுவும் கல்யாணமா..? இல்லை நிச்சயதார்த்தமா ..?
அதற்கு பதில் அளித்துள்ள சமூக வாசிகள், வெண்பாவுக்கு ஒரு வழியாக கல்யாணம் நடக்கப் போகுது ஆனால், அந்த அமெரிக்கா மாப்பிள்ளை யாரு? இல்லை மறுபடியும் பாரதி வைத்து கதை போகுமா..? இருந்தாலும் உங்க அலப்பறை தாங்க முடியவில்லை. இதுவும் கல்யாணமா..? இல்லை நிச்சயதார்த்தமா ..? பிளீஸ் சொல்லுங்க..? என்று கூறியுள்ளார்.
சீரியல் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் கொடுத்து வருபவர் ஃபரீனா என்கின்ற வெண்பா ரசிகரின் இந்த கேள்விக்கு பதில் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சீரியலில் இருந்து விலகும் பாரதி..?
அதுமட்டுமின்று, பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் விலகுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு பதில் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் வெங்கட் பாரதியாக நடிக்கப் இருக்கிறாராம். இது தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.