இதுவரை நீ யாரோ இனி நீதான் ஹீரோ என்கிற 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியின் பாடல் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. 

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. 

கடந்த வாரம் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் முதல், மக்களின் மனம் கவர்ந்த நடன நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. 

Kollywood Movie Thalapathy 68: தளபதி 68 படத்தில் இணையும் பாகுபலி பட நடிகை! எகிறும் எதிர்பார்ப்பு!

பல வகையான ஆடிஷன் மூலம் மொத்தம் 24 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மெகா ஆடிஷன் மூலம் இவர்களில் இருந்து 12 போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் பாடல் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 

2023 Top 10 Melody Songs: 2023-ல் ரசிகர்களின் மனதை உருக வைத்த டாப் 10 மெலடி பாடல்கள்! உங்க ஃபேவரட் எது?

இதுவரை நீ யாரோ இனி நீதான் ஹீரோ என தொடங்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சினேகா, சங்கீதா, பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வருகிறார்.

Scroll to load tweet…