Mayilvaaganam searching for missing wife Rohini : கார்த்திகை தீபம் 2 சிரீயலில் இன்றைய எபிசோடில் கடத்தப்பட்ட ரோகிணியை மயில்வாகனம் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Mayilvaaganam searching for missing wife Rohini : கார்த்திகை தீபம் 2 சீரியலில் ரோகிணியை காணாமல் மயில், ரேவதி மற்றும் கார்த்திக் என்று எல்லோரும் தேட ஆரம்பிக்கின்றனர். முத்துவேல் ரோகிணியை தலையில் தாக்கி மயக்க நிலையில் கடத்தி விட்டார். ஆனால், செல்போன் மண்டபத்தில் தான் கிடந்தது. இந்த நிலையில் தான் ரோகிணியை காணாமல் அனைவரும் தேடும் நிலையில் அவருக்கு போன் போடுகின்றனர். அப்போது போன் ரிங் சத்தம் கேட்க, அதனை கண்டுபிடிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து ரோகிணியை காணாமல் தவிக்கின்ற்னர். அவருக்கு என்னமோ நடந்திருக்கிறது என்று மயில் துடிக்க, கடைசியாக சந்திரகலா தான் அவரை பார்த்திருக்கிறார். அதனால் அவரிடம் வந்து மூவரும் கேட்கின்றனர். ஆனால், அவரோ எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுகிறார். ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த மயில் அவரை அடிக்க துடிக்கிறார். ஆனால், கார்த்திக் அவரை சமாதானம் செய்து வைத்து ரோகிணியை தேட ஆரம்பிக்கின்றனர்.

சந்திரகலாவும் தன் மீது சந்தேகம் வந்த நிலையில் அவரும் தேடுவது போன்று ஆக்டிங் செய்கிறார். அவர் பின்னாடியே கார்த்திக், ரேவதி மற்றும் மயில் மூவரும் செல்கின்றனர். ஒரு கட்டத்தில் மண்டபத்திலேயே உட்கார்ந்துவிடுகிறார் சந்திரகலா. எப்படியும் மண்டபத்திற்கு வெளியில் செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. ஒரு வேளை மண்டபத்திற்கு வெளியில் சென்றிருந்தால் யாரேனும் தகவல் கொடுத்திருப்பார்கள் என்று சொல்லி கார்த்திக் ரோகிணியை தேட ஆரம்பிக்கிறார்.

இதற்கிடையில் பரமேஸ்வரி பாட்டி அங்கு வர அவருக்கு எதுவும் தெரியக் கூடாது என்று கார்த்திக் ரேவதியிடம் கூறிவிடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோடு. எல்லா உண்மையும் தெரிந்த கான்ஸ்டபிள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபறும் மாப்பிள்ளை செல்வத்தின் காதலி மண்டபத்திற்கு வந்து அவரிடம் பேசி வேறு வழியில்லாமல் மண்டபத்திற்கு செல்கிறார். ஒரு கட்டத்தில் கார்த்திக் வரும் காருக்கு முன்பாக கீழே விழுந்து விடுகிறார். அவரை காப்பாற்றி கார்த்திக் மருத்துவமனையில் சேர்க்கிறார். இதே போன்று ரோகிணிக்கு மட்டும் மாப்பிள்ளையை பற்றி தெரிய வர அவரை கடத்தி சென்று அடைத்துவிடுகிறார் முத்துவேல். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.