பேராபத்தில் சிக்கிய கயல்..! தங்கையை காப்பாற்ற எடுக்க போகும் அதிரடி முடிவு? கேள்விக்குறியாகும் எழில் வாழ்க்கை!
'கயல்' சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் அடுத்தடுத்து நடந்து வரும் நிலையில், தற்போதைய புது புரோமோ வெளியாகி சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சன் டிவியில் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி-யில் முதல் இடத்தை தக்கவைத்துள்ள சீரியல் 'கயல்'. எதார்த்தமான கதைக்களத்துடன், அடுத்தடுத்து பல எதிர்பாராத ட்விஸ்டுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு, பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த சீரியலில் அடுத்தடுத்து நடக்கவுள்ள சில அதிரடி சம்பவங்கள் பற்றிய ப்ரோமோ வெளியாகி 'கயல்' சீரியல் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.
ஒரு சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கை வரும், கயலில் குடும்பம் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என நினைக்கும் பணக்கார பெரியப்பாவின் எண்ணத்தை முறியடித்து, வெற்றிகரமாக தன்னுடைய ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றி வருகிறார் கயல். ஆனால் ஏனோ கயலை விடாப்பிடியாக அடுத்த அடுத்த பிரச்சனைகள் துரத்திக்கொண்டிருக்கிறது.
மயூவுக்காக இனியாவை கலங்க வைத்த கோபி..! மகனை வைத்து போடும் புது பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
அண்ணன் மூர்த்தி குடியில் இருந்து மீண்டு பொறுப்பானவராக மாறியுள்ள நிலையில், கயலின் தம்பி அன்பு எக்குத்தப்பாக போதை மருந்து கும்பலிடம் மாட்டிக் கொண்டு சிக்கி தவிக்கிறார். அதே போல் தங்கை ஆனந்தி தன்னிடம் தவறாக நடந்து கொள்ள வந்த பிரபுவை கொலை செய்துவிட்டார். கயலுக்கு அன்பு பற்றிய தகவல் இதுவரை தெரியவரவில்லை என்றாலும், ஆனந்தி இந்த கொலை வழக்கில் சிக்கிய கூடாது என, தங்கையுடன் சேர்ந்து, பிரபுவின் உடலை குழி தோண்டி புதைத்து விட்டார். இதோடு இந்த பிரச்சனை முடிவு வந்து விட்டது என கயல் - ஆனந்தி நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், இந்த கொலை சம்பந்தமாக புதிய பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ரக்ஷா பந்தன் ஸ்பெஷல்... ரியல் லைஃப் பாசமலர்களுடன் கோலிவுட் பிரபலங்கள் எடுத்த அரிய புகைப்படங்கள் இதோ
அதாவது பிரபுவை கயல் புதைத்த அந்த இடத்தில், சிவில் வேலை காரணமாக நிலத்தை அளந்து சில இடங்களில் குழி தோண்டும் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருகிறது. இந்த விஷயத்தில் நேரில் பார்க்கும் கயல் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார். பிரபுவின் கொலை சம்பவமும் வெளியே வருமா என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், மற்றொரு புறம் கயல் தங்கையை காப்பாற்ற என்ன செய்ய செய்வார் என்கிற ஆவலும் எழுந்துள்ளது.
ஒருவேளை ஆனந்தியை இந்த கொலை வழக்கில் இருந்து காப்பாற்ற வேண்டும் என, கயல் இந்த கொலை பணியை தானே ஏற்று கொள்வாரா? அப்படி இந்த பழியை ஏற்றுக்கொண்டு கயல் சிறைக்கு சென்றால்... சிறிய வயதில் இருந்தே கயல் தான் தன்னுடைய மனைவி என நினைத்து கொண்டிருக்கும் நிலையில் இவரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.