KRK Making Video released: காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு, மீண்டும் வெற்றி கூட்டணியுடன் இணைந்து பெரிய எதிர்பார்ப்புகளுடன் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வந்துள்ள வெற்றி படமாக ஓடி கொண்டிருக்கிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல்:

காமெடியை அதிகமாக கொண்டுள்ள இந்தப் படம் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனின் அடுத்த படைப்பாக வெளியாகியிருக்கிறது. 

இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. அனிருத், தனது 25 வது படமான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு இசையில் பட்டையை கிளப்பி இருக்கிறார். 

'டூ டூ டூ' பாடல்:

இப்படத்தின் பாடலான 'டூ டூ டூ' மற்றும் நான் பிழை பாடல் படம் ரிலீசுக்கு முன்பாக இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. குறிப்பாக டூடூடூ பாடல் திரையரங்கில் அனைவரையும் எழுந்து ஆட்டம் போடவைத்தது.

கதைக்களம்:

தமிழ் சினிமா வழக்கமாக பார்த்து பழகிய காதல் கதைகள் போல் இல்லாமல், சற்று வித்தியாசமான பாணியில் ஒரு ஆண் இரு பெண்களுக்கு இடையே உள்ள காதல் மற்றும் மோதலை இந்த திரைப்படம் காட்டுகிறது. 

விக்னேஷ் சிவன், படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை நகைச்சுவையுடன் கதைக்களத்தை நகர்த்தி இருந்தார். தற்போது வரை இந்த படம் 56 கோடிகளை கடந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.

மேக்கிங் வீடியோ: 

தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான 'ரெட் ஜெயிண்ட்' வெளியிட்ட இந்த திரைப்படம், வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் இந்த காட்சியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க....Thalapathy66: தளபதி 66ல் சூப்பர் அப்டேட் தந்த படக்குழு...விஜய்க்கு அம்மாவாகும் பிரபல ஹீரோயின்...யார் தெரியுமா?

விக்னேஷ் சிவன் டான்ஸ்: 

இந்த வீடியோவில், விக்னேஷ் சிவன் 'டூ டூ டூ' பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அவரின் ஆட்டம் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்து அஜித் 62 இயக்க உள்ள நிலையில், இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று தந்துள்ளது. 
YouTube video player