Police Constable Reveals the Truth : கார்த்திகை தீபம் 2 சீரியலில் சாமுண்டீஸ்வரி அம்மாவின் மரணத்திற்கு யார் காரணம் என்ற உண்மையை கான்ஸ்டபிள் கூறும் நிலையில் அவர்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேருமா என்பது பற்றி பார்க்கலாம்.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் கார்த்திகை தீபம் 2 சீரியலும் ஒன்று. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கார்த்திகை தீபம் முதல் சீசன் வெற்றிகரமாக ஓடிய நிலையில் இப்போது 2ஆவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

நேற்றைய எபிசோடில் துர்காவிற்கும் அவரது அம்மா பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு இடையூறாக இருக்கும் நவீனை சந்திரகலா போலீசில் பிடித்துக் கொடுத்துவிட்டார். அவர், சிறையில் இருக்கும் நிலையில் துர்காவின் திருமணம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கார்த்திக் அவரை வெளியில் எடுக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் மண்டபத்திற்கு பரமேஸ்வரி பாட்டி என்ட்ரி கொடுக்கிறார். சாமுண்டீஸ்வரி நீ எதுக்கு இங்க வந்த என்று கேள்வி கேட்க என் பேத்தியோட நல்லதுக்கு நான் வந்து இருக்கேன் என்று பதிலடி கொடுக்கிறார். சந்திரகலா இடையில் புகுந்து பரமேஸ்வரி பாட்டியை கேவலமாக பேசி அவர் கொண்டு வந்த தட்டை தூக்கி வீசி அவமானப்படுத்துகிறார். சாமுண்டீஸ்வரி மகள்கள் எல்லாரையும் எப்படி மாற்றி வைத்து இருக்கா பாரு என்று சாமுண்டீஸ்வரியை ஏற்றி விடுகிறார். இதனால் கடுப்பான சாமுண்டீஸ்வரி ஒழுங்கு மரியாதையா நீ வெளியே போயிடு என்று விரட்டுகிறார்.

கார்த்திக் நவீனை வெளிய எடுக்க வந்திருக்க ரேவதி இடம் நீங்கள் மண்டபத்துக்கு போயிடுங்க.. நவீனை நான் வெளியே கொண்டு வரேன் என்று வாக்கு கொடுக்கிறார். மறுபக்கம் பரமேஸ்வரி பாட்டி அவமானப்பட்டு வெளியே வருவதை பார்த்த கான்ஸ்டபிள் எல்லாத்துக்கும் காரணம் நான்தான் என வருத்தப்படுகிறார். ஒரு கட்டத்தில் பரமேஸ்வரி பாட்டியிடம் உண்மையை சொல்லும் கான்ஸ்டபிள், நேராக சென்று சாமுண்டீஸ்வரியிடம் சொல்லியிருந்தாள், அவர் உண்மையை புரிந்து கொண்டிருப்பார்.

ஆனால், கான்ஸ்டபிளோ பரமேஸ்வரி பாட்டியிடம் சொல்ல ஒரு பயனும் இல்லை. கான்ஸ்டபிள் சொன்ன உண்மையால் ஒரு நிமிடம் ஆடிப்போன பரமேஸ்வரி பாட்டி அடுத்து என்ன செய்கிறார் என்பது பற்றி கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்.