Karthik Raj Identify Future Partner Who involved Theft : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் வருங்கால சம்பந்தி வீட்டில் திருடிய வருங்கால மாப்பிள்ளையின் அம்மா மற்றும் அப்பாவை கார்த்திக் கையும், களவுமாக பிடித்துள்ளார்.
Karthik Raj Identify Future Partner Who involved Theft : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2. இந்த சீரியலில் தற்போது துர்காவின் திருமண வைபவங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், இன்னும் அதற்கான சடங்குகள் ஆரம்பிப்பதற்குள்ளாக ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளது. ஏற்கனவே கோயிலில் நவீன் உடன் திருமணம் நடந்த துர்காவிற்கு இப்போது வேறொரு மாப்பிள்ளையுடன் திருமண மண்டபத்தில் ஊரறிய 2ஆவது திருமணம் நடைபெற இருக்கிறது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் அதற்கு முந்தைய நாள் மண்டபத்தில் நடக்கும் காட்சிகளைப் பற்றி தான் இன்றைய தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.
ஏற்கனவே கார்த்திக்கிற்கு மாப்பிள்ளை வீட்டார் மீது ஒரு டவுட் இருந்து கொண்டே இருந்தது. அதிலேயும் மாப்பிள்ளையின் அப்பா மற்றும் அம்மா மீது ரொம்பவே சாஸ்தியாக இருந்தது. இதன் காரணமாக தனக்கு தெரிந்த எஸ் ஐ ஒருவரிடம் அவர்களது புகைப்படத்தை அனுப்பி விசாரிக்க செய்தார். அவரும் விசாரித்து அவர்களைப் பற்றிய உண்மையை கார்த்திக்கிற்கு ஆதாரத்துடன் அனுப்பி விட்டார். மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும் நிலையில் அப்பாவும், அம்மாவும் சம்பந்தியான சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு திருட சென்றனர்.
அப்போது இருவரும் மண்டபத்தில் இல்லாததை தெரிந்த கொண்ட கார்த்திக் மயில்வாகனம் மூலமாக ஒரு ஐடியா பண்ணி அவர்களை தனது வலையில் சிக்க வைத்தார். சாமுண்டீஸ்வரி வீட்டிலிருந்து நகை பணத்தை திருடிக் கொண்டு ஆட்டோவில் எஸ்கேப்பாக முயற்சி செய்கின்றனர். ஆட்டோ டிரைவராக மாறுவேடத்தில் வந்திருக்கும் மயில் வாகனம் இவர்களை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று கட்டிப் போடுகிறார். இதே போன்று மறுபுறம் சந்திரகலாவின் உதவியுடன் கடத்தப்பட்ட ரேவதியை ரௌடிகள் மாப்பிள்ளையின் காதலி வசந்தா அடைத்து வைத்திருக்கும் இடத்தில் அடைத்து வைக்கின்றனர்.
அப்போது உஷாரான ரேவதி வசந்தாவிடம் உன்னை காப்பாற்றவே வந்திருப்பதாக கூறி கார்த்திக்கிற்கு தான் இருக்கும் இடத்தின் லோகேஷனை அனுப்பி வைக்கிறார். கார்த்தியின் அங்கு வந்து ரவுடிகளிடம் சண்டையிட்டு இருவரையும் காப்பாற்றுகிறார். இந்த நிலையில் வசந்தாவுக்கு பிரசவ வலி ஏற்பட அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து ரேவதி மண்டபத்திற்கு வர துர்கா கையில் பூச்சி மருந்துடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் இன்றைய கார்த்திகை தீபம் 2 சீரியலின் எபிசோடுகள்.
