Asianet News TamilAsianet News Tamil

குணசேகரா மொத்தமும் போச்சா... பட்ட நாமம் போட்ட ஜீவானந்தம்! கொதிக்கும் ஜனனி.. அடுத்து நடக்க போவது என்ன?

அப்பாத்தாவின் 40 சதவீத சொத்து முழுவதும், ஜீவானந்தம் பெயருக்கு போய் விட்டதை குணசேகரன் அறிந்து கொள்ள அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

ethirneechal serial today episode update
Author
First Published Jul 19, 2023, 7:13 PM IST

அப்பத்தாவிடம் இருந்து 40 சதவீத சொத்து மொத்தத்தையும் ஆட்டையை போட நினைத்த, குணசேகரனுக்கே இப்போது ஆப்பு வைத்தது போல், ஜீவானந்தம் பட்டம்மாள் பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களையும் தன்னுடைய பெயருக்கு மாற்றி கொண்டார் என்கிற  உண்மை இன்று தான், ஆடிட்டர் மூலம்... குணசேகரனுக்கு தெரிய வருகிறது.

ஆடிட்டர் மொத்த சொத்தும் போச்சு என கூறியதும், குணசேகரன் சட்டென... ஏன் ஏதாவது கவர்மெண்ட்ல சீல் வைத்துவிட்டார்களா என கேட்க, ஜீவானந்தம் என்கிற நபரின் பேருக்கு மொத்த சொத்து போய் விட்டது என கூற, எப்படியும் சொத்து நமக்கு தான் என ஆட்டம் போட்டு கொண்டிருந்த குணசேகரன் உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைகிறார்.

ethirneechal serial today episode update

சாதனைகள் படைக்க காத்திருக்கும் ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் ! வர்த்தக வட்டாரங்கள் கணிப்பு பலிக்குமா?

மேலும் இந்த தகவல், ஜனனிக்கும் தெரிய வர... ஜீவானந்தத்தை கண்டிப்பாக குணசேகரனால் வின் பண்ண முடியாது. நானா? அந்த ஆளா? என ஒரு கை பார்த்து விடுகிறேன் என ஆவேசமாக பேசியுள்ளார் ஜனனி. எனவே இன்றைய எபிசோடு மிகவும் எதிர்பார்க்க கூடிய ஒன்றாக மாறியுள்ளது. ஜனனி, ஜீவானந்தத்திடம் இருந்து சொத்துக்களை எப்படி மீட்க போகிறார்... அதற்க்கு குணசேகரன் துணை நிற்பாரா, அல்லது அவர் எப்போதும் போல் அதிரடி போக்கை கையாண்டு அப்பத்தா சொத்தை மீட்க முயற்சி செய்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios