Asianet News TamilAsianet News Tamil

சாதனைகள் படைக்க காத்திருக்கும் ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் ! வர்த்தக வட்டாரங்கள் கணிப்பு பலிக்குமா?

வட இந்தியாவில் சாதனைகள் செய்து,  பாகுபலி படம் முதல் நாளில் 100 கோடியைக் குவித்தது போல்,  ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் தென்னிந்தியாவில் சாதனைகள் செய்து, முதல் நாளில், 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூலிக்கும் என  வர்த்தக வட்டாரங்கள் கணித்து கூறி வருகிறார்கள்.
 

Shahrukh Khan Jawan will break release day records in the South
Author
First Published Jul 19, 2023, 6:14 PM IST

கிங்க்கான் ஷாருக்கான் நடிப்பில், இந்த ஆண்டில்  மிகவும் எதிர்பார்க்கப்படும்  திரைப்படம் "ஜவான்".  ரசிகர்கள், பார்வையாளர்கள் மட்டுமின்றி வர்த்தக வட்டாரங்களிலும் இப்படம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.   சமீபத்திய வெளியான ப்ரிவ்யூ, கிங் கானை முரட்டுத்தனமான மற்றும் இதுவரை கண்டிராத அவதாரத்தில் காட்சிப்படுத்தியிருந்தது, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுக்க இப்படம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.  தென்னிந்தியாவில் "ஜவான்" படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெருமளவில்   உயர்ந்துள்ளது.

Shahrukh Khan Jawan will break release day records in the South

குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ய நினைத்த இயக்குனர்! நடிகை கூறிய பகீர் தகவல்!

'பாகுபலி' தென்னிந்தியப் படங்களுக்கு இந்தி மார்க்கெட்டைத் திறந்துவிட்டதைப் போல , 'ஜவான்' வட இந்தியப் படங்களுக்கான தென்னிந்திய மார்க்கெட்டை உயர்த்துமென வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷாருக்கானின் ஜவான் படத்தின் ரிலீஸ்  நாள் வசூல்  குறித்து வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த வல்லுநர்கள் ஒருமனதான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை, இப்படம் தொடக்க நாளில் 100 கோடி, மேலும் ஹிந்தி பெல்ட்டில் இருந்து 60 கோடிகளை வசூலிக்கும் எனவும், தென்னிந்தியாவில் 35-40 கோடி வசூல் செய்யவும் வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர். இந்த மிகப்பெரிய ஓப்பனிங்கிற்கு முக்கிய காரணம் ஷாருக்கின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து மற்றும் படத்தில் நன்கு அறியப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் இருப்பதுதான். மேலும், எந்த பெரிய படமும் வெளியாகாத செப்டம்பர் 7ஆம் தேதி இப்படம்  வெளியாகிறது.

Shahrukh Khan Jawan will break release day records in the South

டிடி ரிட்டர்ன்ஸ் செய்தியாளர் சந்திப்பில்... லோகேஷ் கனகராஜை மறைமுகமாக போட்டு தாக்கிய சந்தானம்?

'பாகுபலி' திரைப்படம் தென்னிந்தியப் படங்களுக்கு ஹிந்தி மார்க்கெட்டைத் திறந்துவிட்டதை போல, 'ஜவான்' திரைப்படம் இந்தித் திரையுலகிற்குத் தென்னிந்தியத் திரையுலகில் ஒரு புதிய சந்தையைக் கட்டியெழுப்ப வாய்ப்புள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பல சிங்கிள் ஸ்கிரீன் உரிமையாளர்களும் லாக்டவுனின் போது ஏற்பட்ட இழப்புகளைத் தொடர்ந்து இந்தப் படம் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். திரைத்துறை மூத்த ஆய்வாளர் ஸ்ரீதர் பிள்ளை கூறுகையில், 'ஜவான்' தென்னிந்தியச் சந்தையிலும் இந்த ஆண்டு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் திரையரங்குகளில் வெளியிடும் உரிமைக்கு 40 முதல் 50 கோடி வரை விலை கேட்கப்படுகிறது, மேலும் இது ஒரு தென்னிந்தியப் படம் மற்றும் உண்மையான பான் இந்தியா படம் என்பதை விநியோகஸ்தர்களும் ஒப்புக்கொள்கிறார்கள் என்கிறார்.

Shahrukh Khan Jawan will break release day records in the South

வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்க தயார்..! கைதி பார்ட் 2 எப்போது? லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

அமிதாப் பச்சனும், ஜீதேந்திராவும் அவர்களின் காலத்தில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து உண்மையான பான்-இந்தியப் படங்களை உருவாக்கினார்கள் என்கிறார் அதுல் மோகன். நம் திரைப்பட இயக்குநர்கள் என்ஆர்ஐ பார்வையாளர்களுக்காகப் படங்களை வடிவமைக்கத் தொடங்கிய ஒரு காலம் இருந்தது. இருப்பினும், கோவிடுக்குப் பிறகு வெளிச் சந்தையிலிருந்து லாபம் குறைந்ததால், தென்னிந்தியச் சந்தைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 'பதான்' படத்தில், ஷாருக் பார்வையாளர்களிடமிருந்து உணர்ச்சிப்பூர்வமான ஆதரவைப் பெற்றார்.  'ஜவான்' படம் முடிய இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. இந்த முறை படத்தை விளம்பரப் படுத்துவதில், ஒரு புதிய சந்தைப்படுத்தல் நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. நேரடி டீஸர் அல்லது டிரெய்லருக்குப் பதிலாக, எடுத்துக்காட்டாக, "ப்ரிவ்யூ" என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது.  ஒரு படத்தைப் பற்றிய  எதிர்பார்ப்பைக் கூட்ட, டிரெய்லர் ரிலீஸுக்கு 10 நாட்களுக்கு முன்பு, மிகவும் தாமதமாக வெளியிடப்படும், அப்படிப்பட்ட சூழலில்,  ஆனால் வெகு முன்பாகவே வெளியான ப்ரிவ்யூ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ஹிந்தி மார்க்கெட்டில் 60 கோடியிலும், தென்னிந்தியாவில் 30 முதல் 40 கோடியிலும் இதன் வசூல் தொடங்கும் எனத் தெரிகிறது.

Shahrukh Khan Jawan will break release day records in the South

'ப்ராஜெக்ட் கே' படத்திற்காக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்! வைரலாகும் ஸ்டைலிஷ் புகைப்படம்!

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios