MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டிடி ரிட்டர்ன்ஸ் செய்தியாளர் சந்திப்பில்... லோகேஷ் கனகராஜை மறைமுகமாக போட்டு தாக்கிய சந்தானம்?

டிடி ரிட்டர்ன்ஸ் செய்தியாளர் சந்திப்பில்... லோகேஷ் கனகராஜை மறைமுகமாக போட்டு தாக்கிய சந்தானம்?

நடிகர் சந்தானம் திரைப்பட இயக்குனர்கள் புகை மற்றும் மது காட்சிகளை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளதால்,  இது இயக்குனர் லோகேஷ் கனகராஜை குறிவைத்து தான் பேசியுள்ளாரா என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jul 19 2023, 04:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் வெற்றி படங்களை இயக்கி வந்தாலும் , இவரின் படங்களில் மது, போதை பொருள், புகை பிடிப்பது போன்ற காட்சிகள் எல்லையை மீறி வைக்கப்படுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதற்க்கு ஏற்ற போல், இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களும் போதை பொருள் மற்றும் மது குடிப்பது போன்ற காட்சிகளும் அதிகம் இடம்பெற்றுருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சமீபத்தில் 'லியோ' படத்தில் இருந்து, வெளியான நா ரெடி பாடலும் புகை மற்றும் மது சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில் நடிகர் சந்தானம், இயக்குனர் லோகேஷ் கனகராஜை குறிவைத்து மறைமுகமாக பேசுவது போல், தில்லுக்கு துட்டு ரிட்டர்ன்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில், "திரைப்படங்களில் இயக்குனர்கள் முடிந்தவரை புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்க தயார்..! கைதி பார்ட் 2 எப்போது? லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!
 

35

சந்தானம் நடிப்பில் உருவாகி வருகிற  இந்த திரைப்படம், வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படம் தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். "அப்போது பேசிய அவர், டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர இருப்பதாகவும், இது ஒரு வித்தியாசமான பேய் படம் என்றும்  தெரிவித்துள்ளார். மேலும் இது திகில் கலந்த நகைச்சுவை படம் என்பதால், ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் என்றும் இந்த படம் வெற்றி பெற்றால் இதன் தொடர்ச்சி வெளியாகும் என்றும் அடுத்ததாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற படம் வெளிவர இருப்பதாகவும் கூறினார்.

45

தற்போது கதாநாயகனாக நடித்து வருவதாகவும்.... நகைச்சுவை நடிகரா, கதாநாயகனா என என்னிடம் கேட்டால் இட்லி வேண்டுமா தோசை வேண்டுமா என்பது போல இருப்பதாகவும், நகைச்சுவையுடன் கூறிய சந்தானம், நகைச்சுவை நடிகராக இருந்தபோது எவ்வித கவலையும் இல்லாமல் இருந்ததாகவும் தற்போது கதாநாயகனாக நடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன் எனவும் மீண்டும் நல்ல கதை வந்தால் நகைச்சுவை கேரக்டரில் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பேன் எனவும்  கூறினார். இதே போல் சொந்த படம் எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும், இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை எனவும் கூறியதுடன் திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்ப்பது சிறப்பு என்றும் அறிவுறுத்தினர்.

'ப்ராஜெக்ட் கே' படத்திற்காக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்! வைரலாகும் ஸ்டைலிஷ் புகைப்படம்!

55

தொடர்ந்து  காலையில் மது அருந்துவோர் குறித்த அமைச்சர் முத்துசாமியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சந்தானம், தான் டிடி ரிட்டன்ஸ் குறித்து பேச வந்ததாகவும் இது தொடர்பாக நான் பதில் அளித்தால் காலையிலேயே நான் சரக்கு போட்டு வந்ததாக மக்கள் நினைப்பார்கள் எனவும் சிரித்துக் கொண்டே பதில் அளித்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ்
சந்தானம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved