Youtube Premium | திடீரென 58% அதிகரித்த யூடியூப் பிரீமியம் கட்டணம்! பயனாளர்கள் ஷாக்!
யூடியூப் தனது பிரீமியம் சந்தா கட்டணத்தை அதிகரித்துள்ளது. விளம்பரங்கள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க விரும்புவோர் இப்போது கணிசமாக அதிகரித்த கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். 58% வரை கட்டண உயர்வாள் பயனாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஏதாவது சிறிய தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் கூகுளில் தேடுவது போலவே, உடனே யூடியூப்பைத் திறந்து ஏதேனும் வீடியோ இருக்கிறதா என்று பார்க்கும் பழக்கம் அனைவருக்கும் உண்டு. குறிப்பாக, ஒவ்வொரு மொழியிலும் யூடியூப் வீடியோக்கள் கிடைப்பதால், பலர் யூடியூப்பையே அதிகம் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களில் முக்கிய பங்கு வகிக்கும் யூடியூப் பிரீமியம் சந்தா கட்டணத்தை கூகுள் அதிகரித்துள்ளது.
தனிநபர் திட்டங்கள் மாறிவிட்டன
- மாணவர், குடும்பம், தனிநபர் என அனைத்து பிரிவுகளிலும் சந்தா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- யூடியூப் பிரீமியம் மாதாந்திர மாணவர் திட்டம் 12.6 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- இதனால் ரூ.79 ஆக இருந்த இந்த திட்டம் இப்போது ரூ.89 ஆக உயர்ந்துள்ளது.
- தனிநபர் மாதாந்திர திட்டம் 15 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- ரூ.129 ஆக இருந்த இந்த திட்டம் ரூ.149 ஆக உயர்ந்துள்ளது.
- மாதாந்திர குடும்பத் திட்டம் ரூ. 189 ஆக இருந்த நிலையில், விலை உயர்வால் ரூ. 299 செலுத்த வேண்டியிருக்கும்.
- இது 58 சதவீதம் அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த திட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் வரை ஒரே சந்தாவில் யூடியூப் பிரீமியத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மாதாந்திர சந்தாக்களும் அதிகரித்துள்ளன..
- மாதாந்திர, காலாண்டு, ஆண்டு தனிநபர் முன்பணத் திட்டங்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.
- மாதாந்திர சந்தா ரூ. 139 ஆக இருந்த நிலையில், இப்போது ரூ.159 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- காலாண்டு திட்டம் ரூ.399 ஆக இருந்தது ரூ. 459 ஆக உயர்ந்துள்ளது.
- ஆண்டு திட்டம் ரூ.1299 விலையை உயர்த்தி ரூ.1,490 செலுத்த வேண்டும் என்று யூடியூப் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய கட்டணங்கள், புதிய சந்தாதாரர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பிரீமியம் பயனர்களுக்கும் பொருந்தும் என்று அது தெரிவித்துள்ளது.
பிரீமியம் சந்தா எடுத்தால் கிடைக்கும் நன்மைகள்..
YouTube பிரீமியம் சந்தாவை எடுத்தால் விளம்பரம் இல்லாத ஸ்ட்ரீமிங் கிடைக்கும். 1080p தெளிவுத்திறனில் அதிக-பிட்ரேட் ஸ்ட்ரீமிங் செய்யலாம். ஆஃப்லைன் பதிவிறக்கம், பின்னணி பிளேபேக், யூடியூப் மியூசிக் இல் விளம்பரம் இல்லாத ஸ்ட்ரீமிங் போன்ற நன்மைகள் கிடைக்கும்.
விலை உயர்வு குறித்து பயனர்களுக்கு மின்னஞ்சல்கள்..
விலை உயர்வு தொடர்பாக YouTube ஏற்கனவே உள்ள பயனர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. சந்தாவைத் தொடர பயனர்கள் புதிய கட்டணங்களை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறைந்து வரும் Y குரோமோசோம்கள் எண்ணிக்கை! கேள்விக்குறியாகும் ஆண் குழந்தை பிறப்பு!