ரூ.50 ஆயிரத்திற்குள் iPhone 13 வாங்கலாம்.. எப்படி? இப்படி..
பிளிப்கார்ட்டில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை 50 ஆயிரம் ரூபாய்க்குள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் 128 ஜிபி வேரியண்ட் மாடல் 69,990 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. 256ஜிபி, 512ஜிபி மாடல்கள் முறையே 79,900 ரூபாய், 99,900 ரூபாய் என்று அறிமுகம் செய்யப்பட்டன. அண்மையில் ஃபிளிப்கார்ட்டில் நடந்த தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையில் ஐபோன் 13 விலை வெறும் 45 ஆயிரம் ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பெரும்பாலானோரால் இந்த விலையில் வாங்க முடியாமல் போனதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது ஐபோன் 13 ஸ்மார்ட்போனை 50 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக வாங்கும் வகையில் ஒரு வழி உள்ளது. தற்சமயம் எந்த விதமான விழாக்கால ஆஃபர், வங்கி கார்டுகளுக்கான ஆஃபர்கள் எதுவும் இல்லை. இருப்பினும், பிளிப்கார்ட் ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் இருப்பதால், இதனைப் பயன்படுத்தி ஐபோன் 13 வாங்கலாம்.
அதன்படி, பிளிப்கார்ட் தரப்பில் ஐபோன் 13க்கு 4000 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி உள்ளது. இதனால் ஐபோனின் விலை 65,999 ரூபாய் ஆகும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் அதிகபட்சமாக 17,500 வரையில் வழங்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் பயன்படுத்தினால் ஐபோனின் விலை 48,500 ரூபாய்க்கு வந்துவிடுகிறது.
பிளிப்கார்ட்டில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் என்பது போனிற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. போனின் நிலை, வெளிப்புறத் தோற்றம், ஆயுட்காலம் என பல்வேறு காரணிகளை வைத்து எக்ஸ்சேஞ்ச் விலை தீர்மானிக்கப்படுகிறது.
எனவே, நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு, நல்ல நிலையில் ஸ்மார்ட்போன் இருந்தால், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பயன்படுத்தி 48,500 ரூபாய்க்கு ஐபோன் 13 பெற்றுக்கொள்ளலாம். அடுத்ததாக புத்தாண்டு விற்பனையில் பெரிய அளவில் ஆஃபர்களை எதிர்பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் புத்துயிர் பெறும் லாவா நிறுவனம்.. விரைவில் Lava Blaze 5G அறிமுகம்!
ஐபோன் 13 சிறப்பம்சங்கள்:
ஐபோன் 13 ஆனது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமானது. 6.1 இன்ச் திரை அளவு, ஆப்பிள் A15 பயோனிக் சிப், 128ஜிபி மெமரி, 174 கிராம் எடை, கார்னிங் பாதுகாப்பு கிளாஸ், அலுமினியம் ஃபிரேம், நீர்த்துளி, தூசுக்களில் இருந்து பாதுகாப்பு ஆகியவை வழங்கப்படுகிறது.
பின்பக்கத்தில் 12 மெகாபிக்சலுடன் கூடிய பிரைமரி கேமரா, 4K வீடியோ எடுக்கும் வசதியுடன் வருகிறது. இதேபோல் முன்பக்கத்தில் 12 மெகா பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3240 mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஏற்றாறற் போல், 23W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.