டச் ஸ்கிரீனுடன், மிகமிக மெல்லிதான லேப்டாப்.. Xiaomi Book Air 13 அறிமுகம்!
ஷாவ்மி நிறுவனம் புதிதாக வெறும் 12 மிமீ அளவில், டச் ஸ்கிரீனுடன் கூடிய Xiaomi Book Air 13 லேப்டாப்பை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஷாவ்மியின் ரெட்மி நிறுவனம் நேற்று ரெட்மி நோட் 12 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ், ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் என 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதோடு புதிதாக Xiaomi Book Air 13 என்ற லேப்டாப்பையும் அறிமுகம் செய்து உள்ளது. இந்த லேப்டாப் இலகுவான மற்றும் மெல்லிய மாடலாக உள்ளது.
சிறப்பம்சங்கள் :
12 mm தடிமன், 1.2 கிலோ எடையுடன் கூடிய ஷாவ்மி புக் ஏர் 13 லேப்டாப்பில் 2880 x 1800 பிக்சல்கள் கொண்ட 13.3-இன்ச் OLED டச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் 60 Hz ரெஃபிரஷ் ரேட் ( refresh rate ) மற்றும் 16:10 விகித திரை அளவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் 12th Gen Intel Core U series ப்ராசசரால் இயங்குகிறது.. கோர் i5-1230U அல்லது கோர் i7-1250U CPUகள் இதில் உள்ளன. இந்த இரண்டு ப்ராசசர்களிலும் 10 கோர்கள் உள்ளன.
i7 மாடலை 4.7GHz வரை பூஸ்ட் செய்ய முடியும், அதேசமயம் i5 மாடலை 4.4GHz வரை மட்டுமே பூஸ்ட் செய்ய முடியும், இந்த இரண்டு மாடலுக்கும் இதுமட்டும் தான் வித்தியாசம்.
Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனில் அப்படி என்ன தான் இருக்கு? எதுக்கு இவ்வளவு விளம்பரம்?
மற்றபடி லேப்டாப் சிறிதாகவும், மெல்லிதாகவும் இருந்தாலும், இது Xiaomi 65 W ஆதரவுடன் 58.3 Wh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. Wi-Fi 6E இணைப்பு, இரண்டு தண்டர்போல்ட் போர்ட் மற்றும் புளூடூத் 5.2 ஆகியவை உள்ளன. டச் ஸ்கிரீன் என்பதால் திரையில் கொரிலா கிளாஸ் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 360 டிகிரி வரையில் லேப்டாப் ஸ்கிரீனை மடித்துக்கொள்ளலாம். சீனாவில் இதன் விலை கிட்டத்தட்ட 68 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது அறிமுகம் செய்யப்படுமா என்பது சந்தேகமே.