Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனில் அப்படி என்ன தான் இருக்கு? எதுக்கு இவ்வளவு விளம்பரம்?

சாம்சங் நிறுவனத்தின் அட்டகாசமான படைப்புகளில் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் முக்கியமானது. இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான அம்சங்கள் இதில் உள்ளன. இதுகுறித்து இங்கே காண்போம்.

impressive features you should know about Samsung Galaxy Z Fold 4 flip smartphones

மடக்கு ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்வதில் சாம்சங் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் Galaxy Z Flip 4 மற்றும் Galaxy Z Fold 4  ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

இந்த ஸ்மார்ட்போன் முந்தைய போல்டு மாடலை விட பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அதில் டாப் 3 ஐ காணலாம்.

1. பாடங்களை கவனித்துக் கொண்டே குறிப்பு எடுத்துக் கொள்ளலாம் :

கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் தங்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் மூலம் கல்வி கற்றனர். அவர்கள் தங்கள் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனித்து அதற்கென தனியாக ஒரு நோட்டில் குறிப்பெடுத்தனர்.

ஆனால் சாம்சங்கின் இந்த புதிய போல்டு 4 இல் உங்கள் குழந்தைகள்  பாடங்களை கவனித்து கொண்டே இதனுடன் கொடுக்கப்பட்ட பேனாவினை பயன்படுத்தி தங்கள் குறிப்புகளை இதில் எழுதிக் கொள்ளலாம். இது ஸ்மார்ட்போன் போன்ற தோற்றத்துடன் டேப்லெட் அணுகுமுறை காட்சி அனுபவத்தை வழங்குகிறது.

2. கேம் விளையாடிக் கொண்டே சேட் செய்து கொள்ளலாம் :

சாம்சங்கின் கேலக்ஸி போல்டு 4 இல் நீங்கள் உங்களுக்கு விருப்பமான கேமை விளையாடிக் கொண்டிருக்கும் போது உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு மெசேஜ் செய்து கொள்ளலாம். அதாவது, ஒரே நேரத்தில் பல தரப்பட்ட செயலிகளை, ஒரே திரையில் இயக்கலாம். 

3. படத்தை ஒரு புறம் பார்த்துக்கொண்டே மறுபுறம் வரையலாம் :

படம் வரைபவர்கள் இனி கவலை பட தேவை இல்லை. புதிய ஸ்மார்ட் போன் ஃபோல்டபிள் பிரிவில் முன்னணியில் உள்ளதால் இதன் ஒரு பகுதியில் உங்கள் கேலரியில் உள்ள படத்தை வைத்துக்கொண்டு மறுபுறத்தில் பெயிண்டை ஓப்பன் செய்து அந்த படத்தை பார்த்துக்கொண்டே நீங்கள் வரையலாம்.    

இதனை நீங்கள் ட்ரேக் பேடாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதில் பிரைட்னஸ் மற்றும் வால்யூமை குறைத்தும் அதிகரித்தும் கொள்ளலாம். மல்டி டாஸ்கிங்கில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

குறைந்தது 4 ஆப் வரையில் ஒரே திரையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். லேப்டாப்பை போல இதிலும் உங்களுக்கு விருப்பமான விண்டோவை நீங்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios