ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்-க்கு ரூ.7,000 தள்ளுபடி.. மெகா ஆபர்.. மிஸ் பண்ணிடாதீங்க!
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ.7.000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. தள்ளுபடி எப்படி பெறுவது? இந்த போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் சேல்ஸ் சிறப்பு விற்பனை
இந்தியாவில் ஃபிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையில் முன்னணியில் உள்ளன. இதேபோல் விஜய் சேல்ஸ் (Vijay Sales) என்ற நிறுவனமும் ஆன்லைன் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பண்டிகை காலங்கள் மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு விற்பனை அறிவித்து மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மற்ற பொருட்களை விற்பனை செய்து வருகிறது,
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்-க்கு ரூ.7,000 தள்ளுபடி
இந்த நிலையில், ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max)மாடல் இப்போது விஜய் சேல்ஸ் ஆன்லைன் விறபனை தளத்தில் சலுகை விலையில் கிடைக்கிறது. அதாவது ரூ.1,49,900 அறிமுக விலையில் வந்த ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், தற்போது விஜய் சேல்ஸ் இணையதளத்தில் ரூ.1,47,900-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுக்கு ரூ.5,000 தள்ளுபடி உண்டு. ஆக மொத்தம் ரூ.7,000 தள்ளுபடி பெற முடியும்.
EMI வசதியும் உண்டு
முழு தொகையையும் செலுத்த முடியாதவர்களுக்கு EMI வசதியும் உள்ளது. மாதம் ரூ.23,982 செலுத்தி 6 மாதங்களில் போனைப் பெறலாம். பழைய போனை மாற்றி புதியது வாங்க எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு. புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கும், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வாங்க நினைப்பவர்களுக்கும் இதுவே சரியான நேரம்.
என்னென்ன சிறப்பம்சங்கள்?
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 6.9-இன்ச் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. புதிய A19 ப்ரோ சிப்செட் சிறந்த செயல்திறனை அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 39 மணிநேரம் வீடியோ பார்க்கலாம். 48MP பிரதான கேமரா, 48MP அல்ட்ராவைடு, 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் என டிரிபிள் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 18MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் iOS 26 உடன் வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

