பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Redmi Pad.. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?

ஷாவ்மியின் ஃபிளாக் ஷீப் சீரீஸ் 12 T ,12 T ப்ரோ மற்றும் 12 லைட் ஆகியவை  உலக அளவில் அக்டோபர் 4 இல் லான்ச் ஆக உள்ளன. இந்த நிகழ்வின் போது ரெட்மி பேட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Xiaomi to Launch Redmi Pad on October 4 check specs and price details here

சீன நிறுவனமான சாவ்மி கடந்த ஜூலை மாதம் ஷாவ்மி 12S சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தனது புதிய ஃபிளாக் ஷீப் சீரீஸ் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.  இதே நிகழ்வில் புத்தம் புதிய ரெட்மி பேட்  ஒன்றையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக ரெட்மி வெளியிட்டுள்ள டீசரில் "மேக் மொமென்ட்ஸ் மெகா" என்று குறிப்பிடப்பட்டுள்து.  இது கேமராவை மையமாகக் கொண்டதாக இருக்கலாம். அத்துடன் ரெட்மி TWS இயர்பட்ஸ்களும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Whatsapp வீடியோ காலில் புதிய வசதி!

ரெட்மி பேட் சிறப்பம்சங்கள்: 

ரெட்மி பேட் மூன்று அட்டகாசமான வண்ணங்களில் வர உள்ளது. மீடியா டெக் ஹீலியோ ஜி 99 சிப்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதிலுள்ள LED பேனல் 10 பிட் கலர் காம்பினேஷன் கொண்டுள்ளது. 8000 mAh பேட்டரியும், அதற்கு ஏற்றவாறு வேகமான சார்ஜரும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில், MI UI இடைமுகத்துடன் ரெட்மி பேட் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இருப்பதால் அடுத்த சில வருடங்களுக்கு தொடர்ந்து அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெறும் ரூ.8 ஆயிரத்தில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஜியோ?

கேமராவைப் பொறுத்தவரையில், 8 மெகா பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ் கேமரா, 105 கோணத்தை படம் பிடிக்கும் தன்மையுடன் உட்பொதிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/RedmiIndia  என்ற ரெட்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரெட்மி பேட் தொடர்பான டீசர் வெளியாகி வருகிறது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios