Whatsapp வீடியோ காலில் புதிய வசதி!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் உபயோகிக்கப்படும் வாட்ஸ் அப்பில் தற்பொழுது புதிய வசதியாக லிங்க் மூலம் 32 நபர்கள் கலந்துகொள்ளும் வீடியோ காலிங் வசதியை வெளியிடட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 

WhatsApp likely to roll out links for voice, video calls; testing group call for up to 32 people

கொரோனா கால கட்டத்தில் ஆன்லைன் க்ளாஸ் என்ற ஒரு புதிய பாட திட்டங்கள் பல பள்ளிகளில் நடந்து வந்தது . இதற்காக மாணவர்கள் அனைவரையும் சேர்த்து ஆசிரியர்கள் ஒரு குழு தொடங்கி அவர்களுக்கு கற்பித்து வந்தனர். அதன்படி, ஆன்லைன் வகுப்புக்கென்று குறிப்பிட்ட ஆப்களை மட்டுமே பயன்படுத்தும் சூழல் இருந்து வந்தது. 

இந்த நிலையில், வாட்ஸ்அப்பிலும் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் வகையிலான அம்சங்கள் வரவுள்ளன.  வாட்ஸ் அப்  கொண்டு வர உள்ள புதிய அம்சம் வியத்தகு சிறப்புகளை கொண்டு உள்ளது. இதில் ஒரே லிங்க் வழியாக 32 நபர் வரை  வீடியோ காலிங்கில் நாம் இணைத்துக் கொள்ளலாம்.  
இந்த செய்தியை மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் ஸுக்கர்பேர்க் தனது முகநூல் பகுதியில் தெரிவித்து உள்ளார்.

Instagram Update: இனி 1 நிமிட வீடியோவை பதிவேற்றலாம்! எப்படி இருக்கு புது அப்டேட்?

இந்த வீடியோ காலிங் வசதியை நாம்  End to End Encrypted Call எனும் முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் கூறி உள்ளார்.ஆனால் இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எந்த தகவலும் வெளியாக வில்லை. அனைவருக்கும் விருப்பமான சேட்டிங் தலமாக விளங்கும் வாட்ஸ் அப் நிறுவனத்தில் தற்பொழுது லிங்க் மூலம் வீடியோ காலிங் வசதிக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios