வெறும் ரூ.8 ஆயிரத்தில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஜியோ?
ஜியோ நிறுவனம் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய்க்குள் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்தியாவில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 5ஜி சேவை வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை கிடைத்திட வழிவகை செய்யப்படுகிறது. இதற்காக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனைத்தும் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், ஜியோ நிறுவனம் 8 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வந்துள்ளது. Counterpoint Search என்ற தளத்தில் இதுகுறித்து கட்டுரை எழுதியுள்ளது. அதன்படி, ஜியோ நிறுவனம் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டில் 5Gmm அலையுடன், Sub-6 GHz ஆதரிக்கும் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாடு பன்மடங்கு இருக்கும்.
Flipkart ஆஃபர் மோசடி! 80 ஆயிரம் ரூபாய் செலுத்தி ட்ரோன் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி!!
ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும்?
பல வேரியண்டுகளில் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 (கோ எடிசன்), 6.5 இன்ச் அளவிலான திரை, ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 SoC பிராசசர், 4ஜிபி ரேம் ஆகிய அம்சங்கள் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேமராவைப் பொறுத்தவரையில் பின்பக்கத்தில் இரண்டு கேமராவும், அவை 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா இருக்கலாம். மேலும், 32 ஜிபி ஸ்டோரேஜ், சேமிப்பகத்தை விரிவுபடுத்தும் அம்சமும் இருக்கலாம். இதுதொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.