விண்டோஸ் 7 and 8 இனி எங்கும் கிடைக்காது - பல்டி அடித்த மைக்ரோசாஃப்ட்...!!!
விண்டோஸ் 7 & 8 இனி எங்கும் கிடைக்காது - பல்டி அடித்த மைக்ரோசாஃப்ட்...!!!
விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளத்தின் விற்பனையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதன்மூலம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
அதாவது, டெல், டோஷிபா போன்ற நிறுவனங்களுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்து, அவர்கள் விற்கும் புதிய கணினிகளில் விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களை நிறுவி விற்று வந்தது
தற்போது இது போன்ற ஒப்பந்த அடிப்படையிலான விண்டோஸ் 7, 8 விற்பனையை நிறுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக, விண்டோஸ் 10 இயங்குதளம் மட்டுமே விற்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பு :
விற்பனை தான் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு 2020 ஆம் ஆண்டு வரையும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கு 2023 வரையும் சேவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.