Asianet News TamilAsianet News Tamil

WhatsApp Update: புதிய வகையான ஸ்டேட்டஸ் உட்பட 3 அப்டேட்கள் வருகிறது!

வாட்ஸ்அப்பில் புதிதாக 3 அம்சங்கள் பீட்டா வெர்ஷனில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ‘வாய்ஸ் ஆடியோ’வை ஸ்டேட்டஸாக வைக்கலாம்

WhatsApp is working on Voice status update. WhatsApp Chat, Calls tab for Windows, check latest beta here
Author
First Published Nov 25, 2022, 10:56 PM IST

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பில் புதுப்புது அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், தற்போது மூன்று வகையான அம்சங்கள் பீட்டா 2.224.6.4.0 வெர்ஷனில் வந்துள்ளது. அவை: 1. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வாய்ஸ் மெசேஜ் வைப்பது, 2. வாட்ஸ்அப் என்ற பெயரில் அதிகாரப்பூர்வ Chat, 3. வாட்ஸ்அப் டெக்ஸ்க்டாப்பில் ‘Call’க்கு என்று பிரத்யேகமான மெனு ஆகும். 

1.வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வாய்ஸ் மெசேஜ்

வாட்ஸ்அப் ஸ்டேடஸில் இதுவரையில் வீடியோ, படங்கள், எழுத்துக்கள், எமோஜிகள் என பலவற்றை வைக்கும் வகையில் இருந்தது. இனி அதோடு வாய்ஸ் ஆடியோவையும் ஸ்டேட்டஸாக வைக்கலாம். ஸ்டேட்டஸ் கிளிக் செய்தவுடன், எந்த எழுத்துக்களும் டைப் செய்யாத போது, ‘மைக்’ ஐகான் ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்து, உங்கள் குரலை பதிவு செய்து, ஸ்டேடஸாக வைக்கலாம். மேலும், அதை யாரெல்லாம் பார்க்கலாம், கேட்கலாம் என்பதையும் நீங்களே தேர்வுசெய்யலாம்.
 

2. WhatsApp என்ற பெயரில் அதிகாரப்பூர்வ Chat

வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பிலேயே ஒரு WhatsApp என்ற பெயரில் சேட் கொண்டு வரப்படுகிறது. இதில் வாட்ஸ்அப் சம்பந்தமான அப்டேட்டுகள், முக்கிய அறிவிப்புகள் போன்றவை பயனர்களுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் பயனர்கள் நேரடியாகவே வாட்ஸ்அப் தொடர்பான சமீபத்திய விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், தேவைப்படவில்லை எனில் அதை டெலிட் அல்லது மறைக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

WhatsApp Update: இனி WhatsApp Desktop ஸ்கிரீன் லாக் செய்யலாம்!

3. வாட்ஸ்அப் டெக்ஸ்க்டாப்பில் ‘Call’க்கு என்று பிரத்யேகமான மெனு

வாட்ஸ்அப் செயலியைப் போலவே, கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் டெஸ்க்டாப் சாப்ட்வேரில், கால் ஹிஸ்டரி என்ற ஆப்ஷன் கொண்டு வரப்படுகிறது. அதில், நீங்கள் அழைப்புகள் மட்டும் தனியாக பட்டியலிட்டு காட்டப்படும். 

இந்த மூன்று அம்சங்களும் தற்போதைக்கு பீட்டா பதிப்பு வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் எல்லா பயனர்களுக்கும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப்பில் சமீபகாலமாக மேம்படுத்தப்பட்டு வரும் அம்சங்கள் பெரும்பாலும், டெலகிராம் செயலியில் ஏற்கெனவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios