WhatsApp Update: இனி குரூப் சேட் சவுண்ட் மியூட் ஆகிவிடும்!
வாட்ஸ்அப்பில் பெரிய குரூப்களில் இருந்து வரும் சேட் ரிங்டோன் தானாகவே மியூட் செய்யும் வகையிலான அப்டேட் சோதிக்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பில் அடுத்தடுத்து வரவிருக்கும் அம்சங்களானது பீட்டா வெர்ஷன் செயலியில் சோதிக்கப்படுகிறது. அந்த வகையில், புதிதாக ஒரு குரூப் மியூட் ஆப்ஷன் வரவுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்ப் பீட்டா தகவல் என்ற இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.24.15 ஆண்ட்ராய்டு தளத்தில் ‘குரூப் ஆட்டோ மியூட்’ ஆப்ஷன் சோதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த அப்டேட்டின்படி, வாட்ஸ்அப் குரூப்பில் சுமார் 1024 உறுப்பினர்கள் வரையில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் குரூப் சேட்டில் நடைபெறும் உரையாடல்கள், அரட்டைகள் நோட்டிபிகேஷன்கள் பயனர்களை் சிலருக்கு எரிச்சலூட்டலாம்.
இதை சரிசெய்யும் வகையில், 256 பேருக்கு மேல் ஒரு குரூப்பில் உறுப்பினர்கள் வந்தால், அந்த குரூப்பில் இருந்து வரும் நோட்டிபிகேஷன் சவுண்ட் தானாகவே அனைக்கப்படும். பயனர்கள் விரும்பினால், அதை Unmute செய்து கொள்ளலாம். இது அதிகப்படியான குரூப் உறுப்பினர்களுடன் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வருகிறது புது அப்டேட்.. WhatsApp-ல் இனி இந்த வசதி கிடையாது!
இதுகுறித்து ஸ்கிரீன்ஷாட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘நோட்டிபிகேஷன்களைக் குறைப்பதற்காக குரூப் தானாகவே மியூட் செய்யப்படுகிறது’ என்ற அறிவிப்பு தோன்றும். இது ஒரு பெரிய குழுவாக இருப்பதால், நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமான நோட்டிபிகேஷன்கள் வரலாம். எனவே, குரூப்பில் 256 பேருக்கு மேல் ஒருவர் இணைந்தால் கூட, தானாகவே மியூட் செய்யப்படும். உங்கள் குரூப் மியூட் செய்யப்பட்டிருந்தாலும், நீங்கள் விரும்பினால் எந்த நேரத்திலும் குரூப் சேட் நோட்டிபிகேஷன்களை அன்-மியூட் செய்யலாம்.
இந்த அம்சம் தற்போது சோதனை முயற்சியில் மட்டுமே உள்ளது. வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் பயனர்கள் இதை பார்க்கலாம். குறிப்பாக வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.24.15 பதிப்பில் காணலாம். டெலிகிராமுக்குப் போட்டியாக வாட்ஸ்அப்பிலும் பலவிதமான அப்டேட்டுகள் முழுவீச்சில் கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.