WhatsApp மூலமாக இனி ஷாப்பிங்கும் செய்யலாம்!
வாட்ஸ்அப் மூலமாக ஷாப்பிங் செய்யும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஒரு சில நாடுகளில் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது.
மெட்டாவு நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலியில், ‘பிஸ்னஸ் ஃப்ரொபைல்’ வைத்திருக்கும் பயனர்களுக்காக புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சமானது வாட்ஸ்அப்பிலேயே கடைகள், வணிக நிறுவனங்களை தேடலாம், அதன் மூலம் ஷாப்பிங் செய்யலாம், அவர்களுடன் அரட்டையடிக்கலாம், அத்துடன் வெப்சைட்டிற்குச் செல்லாமலே தயாரிப்புகளை வாங்கலாம்.
மேலும், வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்கள் பேங்க், டிராவல் என தங்களுக்கு விருப்பதற்திற்கு ஏற்ப வணிகங்களை பிரவுசிங் செய்யலாம். இந்த அம்சம் தற்போது பிரேசில், கொலம்பியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக வாட்ஸ்அப் பிளாக் தளத்தில் விரிவான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப்பின் புதிய அம்சத்தின் மூலம் நீங்கள் பார்க்கும் ஷாப்பிங் நிறுவனங்களின் நம்பர்களை உங்கள் போனில் சேமிக்க தேவையில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல், இந்த அம்சம் அமல்படுத்தப்பட்ட நாடுகளில் உள்ள பயனர்கள், WhatsApp வணிக தளத்தைப் பயன்படுத்தி மற்ற வணிகங்களின் தொடர்பு விவரங்களைக் கண்டறியலாம்..
கூடுதலாக, பயனர்கள் ஷாப்பிங் வலைத்தளத்தைப் பார்வையிடுவதற்குப் பதிலாக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி நேரடியாக ஷாப்பிங் செய்ய முடியும்.
Zomato இணை நிறுவனர் மோஹித் குப்தா ராஜினாமா! பெருநிறுவனங்களில் அடுத்தடுத்து வெளியேற்றம்!!
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோமார்ட் ஷாப்பிங் அனுபவத்தைப் போலவே இந்த அம்சமும் செயல்படுகிறது. இப்போது, பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. WhatsApp பகிர்ந்தபடி, இந்த அம்சம் பாதுகாப்பானது மற்றும் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும்.
கூடுதலாக, மக்கள் தங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலமாகவே பாதுகாப்பாக பணம் செலுத்த முடியும். இந்த புதுமையான செக் அவுட் அனுபவம் வாட்ஸ்அப்பில் வாங்க விரும்பும் நபர்களுக்கும், விற்க விரும்பும் நபர்களுக்கும் வணிகங்களுக்கும் ஒரு கேம்-சேஞ்சராக இருக்கும்.
அதாவது, ஷாப்பிங் வலைத்தளத்திற்குச் செல்லவும் தேவையில்லை, பணம் செலுத்துவதற்கு வேறு எந்த செயலிக்கும் செல்ல தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஷாப்பிங் அம்சம் எப்போது வரும் என்பது குறித்த விவரங்கள் இனனும் வெளிவரவில்லை.