அடுத்த வாரம் வெளியாகும்.. VIVO T3 5G.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட VIVO நிறுவனம் - முழு விவரம் இதோ!

VIVO T3 5G Launch Date : பிரபல விவோ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பில், வரும் வாரத்தில் தனது புதிய VIVO T3 5G ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யவுள்ளது. 

Vivo officially announced the launch date of new 5g smart phone vivo t3 5g in indian market ans

Vivo T3 5G, அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சீன ஸ்மார்ட்போன் பிராண்ட்டான விவோ இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 15) உறுதிப்படுத்தியது. இது இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Vivo T3 5G ஆனது MediaTek Dimensity தொடர் செயலியில் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பையும் கொண்டிருக்கும்.

Vivo T3 5Gன் வெளியீடு மார்ச் 21 அன்று மதியம் 12:00 IST மணிக்கு நடைபெறும் என்று Vivo ஒரு ஊடக அழைப்பின் மூலம் அறிவித்தது. கூடுதலாக, மேலும் Flipkart மூலம் விற்பனையாகவுள்ள நிலையில், இந்த  கைபேசிக்கு அதன் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தும் புதிய மைக்ரோசைட்டை அமைத்துள்ளது Flipkart. 

இன்னுமா பேடிஎம் Fastag யூஸ் பண்றீங்க? உடனே இதைப் பண்ணுங்க... நெடுஞ்சாலை ஆணையம் முக்கிய அறிவிப்பு

Vivo T3 5G நீல நிறத்தில் கிடைக்கும் மேலும் இது LED ப்ளாஷ் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. கேமரா யூனிட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் சோனி சென்சார் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Vivo T3 5Gன் விலை சுமார் 20,000 ரூபாய் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கிரிஸ்டல் ஃப்ளேக் மற்றும் காஸ்மிக் ப்ளூ ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வரலாம். 

மேலும் வெளியான தகவலின்படி, Vivo T3 5G ஆனது 120Hz Refresh Rateவுடன் 6.67-இன்ச் முழு-HD+ AMOLED திரை மற்றும் 1,800 nits வரை உச்ச பிரகாசத்துடன் இருக்கும். இது 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி RAM மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மெய்நிகர் ரேம் ஆதரவையும் வழங்க முடியும்.

வாட்ஸ்அப் DP யை இனி ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது! சைலெண்டாக அறிமுகமான பிரைவசி அப்டேட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios