வாட்ஸ்அப் DP யை இனி ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது! சைலெண்டாக அறிமுகமான பிரைவசி அப்டேட்!
பயனர்களின் சுயவிவரப் படத்தைப ஸ்கிரீன்ஷாட் எடுப்பதைத் தடுக்கும் முக்கியமான பிரைவசி அப்டேட் குறித்த மெட்டா நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆண்ட்ராய்டு ஆர்வலர்கள் மூலம் வாட்ஸ்அப்பின் சமீபத்திய அப்டேட்டில் இந்த அம்சம் வந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேஷனில் கிடைக்கும் புதிய பிரைவசி அம்சமாக பயனர்களின் DP எனப்படும் சுயவிவரப் படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் ஆப்ஷன் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக பீட்டா பதிப்பில் இந்த அம்சத்தின் செயல்பாடு சோதிக்கப்பட்டு வந்தது. இப்போது அந் அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது.
இதற்கிடையில், வாட்ஸ்அப் ஒரு சாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மெசேஜ்களை பின் செய்யயும் வசதியை பீட்டா பயனர்களுக்கு வழங்கி, சோதிக்கத் தொடங்கியுள்ளது. தனிப்பட்ட உரையாடல்கள் அல்லது குழு உரையாடல்களில் தகவல்களை எளிதாக அணுக இது உதவும் என்று மெட்டா நிறுவனம் கருதுகிறது.
பயனர்களின் சுயவிவரப் படத்தைப ஸ்கிரீன்ஷாட் எடுப்பதைத் தடுக்கும் முக்கியமான பிரைவசி அப்டேட் குறித்த மெட்டா நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆண்ட்ராய்டு ஆர்வலர்கள் மூலம் வாட்ஸ்அப்பின் சமீபத்திய அப்டேட்டில் இந்த அம்சம் வந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கம்பெனியைக் காப்பாற்ற 5G சேவையில் தீவிரம் காட்டும் வோடபோன் ஐடியா! தாக்குப்பிடிக்க முடியுமா?
ஆண்டிராய்டு பீட்டா மற்றும் சமீபத்திய வெர்ஷனில் கிடைக்கும் இந்த வசதி ஐபோன்களுக்கு இன்னும் வரவில்லை. ஐபோன் பீட்டா ஆப் மற்றும் சமீபத்திய வெர்ஷனில் வாட்ஸ்அப் டிஸ்பிளே பிக்சரை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும்.
சாம்சங் ஸ்மார்ட்போனில் இந்த அம்சத்தைச் சோதித்துப் பார்த்தபோது பாதுகாப்புக் கொள்கையைக் காரணம் காட்டி சுயவிவரப் படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது என்ற தகவல் திரையில் தோன்றுகிறது. அதே நேரத்தில் Pixel 7a ஸ்டார்ட்போனில் முயற்சி செய்து பார்த்தபோது, ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடிகிறது. ஆனால், எடுக்கப்படும் வெறும் கருப்பு ஸ்கிரீனைத்தான் காட்டுகிறது.
ஒரு பயனரின் சுயவிவரப் படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதைத் தடுக்கும் அம்சம் மூலம் மட்டும் மற்றொருவர் சுயவிவரப் படத்தைச் சேமித்து வைப்பதைத் தடுக்க முடியாது. மற்றொரு ஸ்மார்ட்போன் அல்லது கேமராவை பயன்படுத்தி, திரையைப் புகைப்படம் எடுத்து சேமிப்பதைத் தடுக்க முடியாது.
663 நாள்களுக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு